India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொங்கலுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஜன-9 முதல் 15 வரை ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, OMR, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி, அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையை தேர்வு செய்யலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஜி.எஸ்.டி சாலை, சென்னை மீனம்பாக்கம், கிண்டி வழியாக செல்ல வேண்டாம் கடுமையான போக்குவரத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் துறையில் 21 காவல் ஆய்வாளர்களுக்கு இடமாற்ற உத்தரவை காவல் ஆணையர் அருண் இன்று பிறப்பித்துள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த 20 ஆய்வாளர்களுக்கு Law & Order மற்றும் Crime பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகள், AWPS மற்றும் Special Crime Units-ல் மாற்றம் செய்யப்பட்டு, உடனடியாக புதிய இடங்களில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.

கில்லர் திரைப்பட படப்பிடிப்பின்போது இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா படுகாயம் அடைந்தார். சென்னை பாலவாக்கத்தில் 3ஆம் கட்ட படப்பிடிப்பு நடந்த போது ரோப் கயிறு உதவியுடன் சண்டைக்காட்சியில் எஸ்.ஜே.சூர்யா நடித்தபோது இரும்பு கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டது. கம்பி மீது விழுந்ததில் எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு விளையாட்டுகளுக்கான Coaches, Para-Sports Coaches இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதில் பணியாற்ற விரும்புவோர், தகுதி மற்றும் திறமை உள்ளிட்ட விவரங்களுடன் sdat.tn.gov.in தளத்தில் விண்ணப்பிக்கலாம் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்

சென்னை திரிசூலம் பகுதியில் அமைந்துள்ளது திரிசூலநாதர் திருக்கோயில். இது ஒரு பழமையான சிவன் கோயிலாகும். நான்கு மலைக் குன்றுகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளதால்,இந்த மலைகள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. இங்குள்ள அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு புடவை சார்த்தி, வளையல் அணிவித்து, சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று 781 பூங்காக்களில் தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் மற்றும் 1,000 மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, 05.01.26 அன்று 1,373 பேருந்து நிறுத்தங்களில் தூய்மை பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று பூங்காக்களில் தேவையற்ற செடிகள், அகற்றப்பட்டதாக மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னையில் டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால், ரூ. 10-வழங்கும் திட்டம், இன்று (ஜன. 06) முதல் அறிமுகமாகிறது. பொதுவெளியில் காலி பாட்டில்கள் வீசப்படுவதை தவிர்த்து, சுற்று சூழல் மற்றும் மாசை குறைப்பதே, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். மது வாங்கும் போது, கூடுதலாக ரூ.10 செலுத்தி, காலி பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும் போது, ரூ. 10-த்தை திரும்ப பெறலாம்.

திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவலர், இளநிலை உதவியாளர், வசூல் எழுத்தர் உள்ளிட்ட பிரிவுகளில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 வயது நிரம்பிய 8th,10th மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.10,000- ரூ58,600 வரை வழங்கப்படும். தேர்வு கிடையாது. <

அம்பத்தூர் ஆவின் தயாரிப்பு நிலையத்தில் பால் பாக்கெட் விலையை திடீரென உயர்த்தி இருப்பதாக சென்னை மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒரு லிட்டர் பச்சை பாக்கெட் பால் ரூ.44-க்கு விற்பனை செய்து வந்த நிலையில், இன்று ரூ.50? விற்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும் பச்சை நிற பால் பாக்கெட் ஏற்கெனவே விற்பனையில் உள்ள நிலையில், கிரீன் மேஜிக்+ விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் வரும் 8ம் தேதி, பபாசி நடத்தும் 49வது புத்தக கண்காட்சி தொடங்குகிறது. இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த புத்தக கண்காட்சியில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. வழக்கமாக பார்வையாளர்களிடம் ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், நடப்பாண்டில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.