India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் புத்தகக் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் வெளியிடப்படவுள்ளது. இந்த வழக்கை விசாரித்த HC, அந்த புத்தகங்களை விற்பனை செய்யாதவாறு உடனடியாக தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதியை கொச்சைப்படுத்தும் விதமான புத்தகம் எந்த நிலையிலும் வெளியாக கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் சென்னைக்கு 1270 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது 24 மணிநேரத்தில் மேலும் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை எண்ணுாரில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

சென்னை மக்களே.. உங்கள் தொகுதி நிதியை MLA முறையாக பயன்படுத்தவில்லையா? உங்கள் பகுதியில் எந்த நல்லதும் செய்யவில்லையா? MLA மீது ஊழல், விதிமீறல் மற்றும் தவறான நடத்தை குறித்த புகார்களை தெரிவிக்கணுமா? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-ன் இந்த 044-22321090 நம்பருக்கு தயங்காமல் அழைத்து புகாரளிக்கலாம். அடுத்த நிமிடம் MLA-வுக்கு அழைப்பு பறக்கும்! இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

சென்னை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <

OMR–ECR இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.270 கோடி மதிப்பில் எஃகு பாலம் அமைக்கப்படுகிறது. பல்லாவரம்–தொரைப்பாக்கம் ரேடியல் சாலை நீட்டிப்பிலிருந்து புறப்பட்டு, ECR-இல் இருந்து 200 மீட்டர் தொலைவில் பாலம் தரையிறங்கும். பணிகள் தொடங்க, துரைப்பாக்கத்தில் 58 குடும்பங்களும், நீலாங்கரை பகுதியில் பட்டா நிலங்களில் வசிக்கும் 63 குடும்பங்களும் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <

சென்னை, கே.கே.நகர் பகுதியில் சொகுசு கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. சாலையில் தாறுமாறாக தறிகெட்டு ஓடிய அந்த கார் சாலையில் 2 ஆட்டோக்கள், 2 லோடு ஆட்டோக்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விப்பத்தில் குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்தனர். பின்னர் பொதுமக்கள் காரை மடக்கிபிடித்தனர். அப்போது ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார் ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் முடிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (20). பிளம்பிங் வேலைக்காக வேளச்சேரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது தனியார் மருத்துவமனையின் வேன் டிரைவர் திடீரென வேனின் கதவை திறந்ததால் அப்துல் ரகுமான் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில், பின்னால் வந்த பின்னால் வந்த தனியார் பள்ளி வாகனம் அப்துல் ரகுமானின் தலையில் ஏறியதால் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

பொங்கலுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஜன-9 முதல் 15 வரை ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, OMR, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி, அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையை தேர்வு செய்யலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஜி.எஸ்.டி சாலை, சென்னை மீனம்பாக்கம், கிண்டி வழியாக செல்ல வேண்டாம் கடுமையான போக்குவரத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.