India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜனவரி 6ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் கோட்டம், தண் டையார்பேட்டை கோட்டம், அம்பத்தூர் கோட்டம் மற்றும் கே.கே.நகர் கோட் டம் ஆகிய கோட்டங்களில் இந்த மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

சென்னை கொளத்தூர் பகுதியில் சைக்கிளை பழுது பார்க்க 14 வயது சிறுவன் சென்றுள்ளான். சிறுவனிடம் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைக்காரர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அலறி அடித்து வீட்டுக்கு ஓடிவந்த சிறுவன் பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். புகாரின் பேரில் போக்சோ வழக்கில் கடைக்காரர் கைதாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நெற்குன்றத்தில் சிலம்பரசன் என்ற நபர் கல்லூரி மாணவி ஒருவரை 3 மாதங்களாக தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும், மதுபோதையில் இருந்த அவர், இன்று காலை காயப்போட துணியை எடுக்க சென்ற மாணவியை மாடியில் இருந்து தள்ளி விட்டு கொல்ல முயற்சித்துள்ளார். சுயநினைவின்றி கிடந்த மாணவிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திலீப், ஸ்டான்லி மற்றும் நீர்ஜ் ஆகியோர் நேற்று காலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வேலை நிமித்தமாக மினி டெம்போவில் வந்து கொண்டிருந்தனர்.சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது மாம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருந்த டாரஸ் லாரியின் பின்பகுதியில் டெம்போ பயங்கரமாக மோதியது. இதில் திலீப், ஸ்டா–லின் இருவரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

சென்னை மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! ஆம், இந்தியன் ரயில்வேயில் குரூப் D 2,200 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த லிங்க்கை <

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜன.5) சென்னையில் தொடங்கி வைக்கிறார். ‘உலகம் உங்கள் கையில்’ என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல், ஏசர், ஹெச்பி போன்ற மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

சென்னை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த <

சென்னை நந்தனத்தில், நேற்று இரவு சித்தப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு, 9ஆம் வகுப்பு மாணவி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை பாலியல் துன்புறுத்தியதாக ஆட்டோ டிரைவர் நீலகண்டன் (25) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நீலகண்டனை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.