India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த சில நாட்களாக கூடுதலாக இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று (அக்.17) முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இன்று (அக்.16) பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட்-ஐ வானிலை மையம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்றும், அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சில பேருந்துகளின் வழித்தடங்களில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அனைத்து பேருந்துகளும் திட்டமிட்ட வழித்தடங்களில் இன்று முதல் அட்டவணைப்படி இயக்கப்படும். அதிகளவில் மழைநீர் தேங்கியதால் பேருந்துகள் இயக்கம் தாமதமானது.பல பேருந்துகள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டது. ரேடியல் சாலை வழியாக சென்று துரைப்பாக்கம் சந்திப்பில் மீண்டும் ஓ.எம்.ஆர் சாலையில் தற்காலிகமாக இயக்கப்பட்டது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு வடக்கே இன்று அதிகாலை 4.30 மணிக்கு கரையை கடந்தது. இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த பின் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக பகுதியில் மேல் தற்போது நிலவி வருவதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் நீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்று மிக கனமழை பெய்யும் என்பதால், குடை அல்லது ரெயின் கோர்ட் எடுத்துச் செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின்படி வழக்கம்போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோரயில்கள் இயக்கப்படும். முதல் மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும்.
மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட அபூர்வ விலங்குகள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உயிரினங்களில் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் இருக்கும் அபாயம் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஒரு பெண் உட்பட 2 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னையில் நேற்று (அக்.15) மட்டும் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகி உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகும் நிலையில், நேற்று கூடுதலாக ஒரு லட்சம் லிட்டர் விற்பனையாகியுள்ளது. இதுகுறித்து நிர்வாக அதிகாரி கூறுகையில், “ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் எல்லா பகுதிகளுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. விநியோகத்தில் பாதிப்பு இல்லை” என்றார்
சென்னையில் பெய்த மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் அறிக்கையாக வெளியாகி உள்ளது. அதன்படி, மழைநீர் பெருக்கு காரணமாக எந்த சுரங்கப்பாதைகளும் மூடவில்லை என்றும், மேட்டுப்பாளையம், கன்னிக்காபுரம், ஆஞ்சநேயர் கோவில் வழி போக்குவரத்து மெதுவாக செல்கிறது என்றும், மாதவரம் நெடுஞ்சாலை முதல் வடபெரும்பாக்கம் வரை சாலை மூடப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் வானிலை மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார். அதில், “தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, நாளை கரையை கடக்கும்போது புதுச்சேரிக்கும் நெல்லூர் ஒட்டி சென்னைக்கும் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.