Chennai

News October 25, 2024

OMR மெட்ரோ சேவை 2027இல் தொடக்கம்

image

ஓ.எம்.ஆர். சாலையில் 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்து, வரும் 2027ஆம் ஆண்டு போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 20-கி.மீ. நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை – 45.4 கி.மீ. பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

News October 25, 2024

ஆவின் லாரியும் கலவை லாரியும் மோதி விபத்து

image

அண்ணாநகர் பகுதி புதிய ஆவடி சாலையில், இன்று அதிகாலை ஆவின் லாரியும் கலவை லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஆவின் லாரி ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News October 25, 2024

ஆன்லைன் பட்டாசு மோசடி: போலீசார் எச்சரிக்கை

image

சென்னையில் உள்ள பொதுமக்கள், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலை தளங்களில் தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பனை செய்வதாக வரும் பொய்யான விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகர போலீசார் மற்றும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் வாங்குவதற்கு பதிலாக நேரில் சென்று வாங்கவும் அறிவுறுத்தி உள்ளனர். ஷேர் பண்ணுங்க

News October 25, 2024

பேருந்தில் தகராறு: கீழே விழுந்து நடத்துநர் உயிரிழப்பு

image

அண்ணா ஆர்ச் அருகே சென்று கொண்டிருந்த 46G மாநகர பேருந்தில், பயணி ஒருவர் மதுபோதையில் தகராறு செய்ததால், அந்த பயணிக்கும் கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், இருவருக்கும் கைகலப்பாகி, அந்த பயணி தள்ளிவிட்டதில் கண்டக்டர் கீழே விழுந்து உயிரிழந்தார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனால், பல்வேறு இடங்களில் பேருந்துகளை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

News October 25, 2024

மெட்ரோ பணி காரணமாக போக்குவரத்து மாற்றம்

image

அடையார் சந்திப்பில் மெட்ரோ பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன. சர்தார் வல்லபாய் படேல் சாலையில் இருந்து கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு பஸ் டிப்போ சந்திப்பில் காந்தி நகர் 2வது குறுக்குத் தெரு வழியாக திரு.வி.கா பாலம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

News October 25, 2024

சென்னையில் இன்றைய ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News October 24, 2024

பேருந்து கட்டணம் தொடர்பாக அமைச்சர் ஆலோசனை

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேருந்து கட்டணம் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று உரிமையாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். உடன் போக்குவரத்துத் துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News October 24, 2024

சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சென்னை 

image

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் சென்னை மாவட்டம் 105 தங்கம் என மொத்தம் 254 பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 31 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி மொத்தம் 93 பதக்கத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் 2ஆம் இடத்தை பெற்றது. 23 தங்கப் பதக்கம் உட்பட 102 பதக்கங்களை கோவை மாவட்டம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.

News October 24, 2024

trektamilnadu.com இணையதளம் துவக்கம்

image

தலைமைச் செயலகத்தில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்கள் ஆகியவற்றில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் அரசின் துணையோடு மலையேற்றப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தையும், trektamilnadu.com இணையதளத்தையும் துவக்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

News October 24, 2024

குடிநீரில் ‘E coli’ பாக்டீரியா: நோய் வராமல் தடுப்பது எப்படி?

image

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கை, கால்கள் சுத்தமாக இருப்பதுடன், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்றாலும், அதை நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி பின் குடித்து வந்தால், நோய் தொற்று குறையக்கூடும். மேலும், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!