India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செம்பியம் பகுதியில் கடைக்குச் சென்று திரும்பிய 10-ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (40) என்பவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செம்பியம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் கந்தசாமியை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதியை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியை ரவுடி ஆதி பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றது. போலீசார் விசாரிக்கின்றனர்.

சைதாப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேவசேனா (21), நந்தனத்தில் உள்ள தனது தந்தையைப் பார்த்துவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மாநகரப் பேருந்து மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பேருந்து சக்கரம் ஏறியது. தலைக்கவசம் அணிந்திருந்தும், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் குளிர்சாத வசதியுடன் மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.01.2026) தொடங்கி வைக்கிறார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, சென்னை அழகை பார்த்து ரசிப்பதற்கும் வசதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் குளிர்சாத வசதியுடன் மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.01.2026) தொடங்கி வைக்கிறார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, சென்னை அழகை பார்த்து ரசிப்பதற்கும் வசதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க

சென்னை மாவட்டத்தில் இன்று (11.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் சமெரினா கடற்கரையில் இன்று (11.01.2026) மாலை திருக்குறள் பழந்தமிழிலக்கிய
இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை நடைபெறுவதாக இருந்த திருக்குறள் பழந்தமிழிலக்கிய
இசை நிகழ்ச்சி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
18.01.2026 அன்று மாலை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

சென்னை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

சென்னையில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500 அல்லது 94450 30516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதன்மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். *இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க*
Sorry, no posts matched your criteria.