India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மாநகராட்சியில் வீடுகளில் சேரும் பழைய சோஃபா, மெத்தை மற்றும் மரச்சாமான்கள் போன்ற கழிவுகளைச் சனிக்கிழமைதோறும் அகற்றும் திட்டத்தின் கீழ், இதுவரை 1,769 பேரிடமிருந்து 664.68 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை (ஜன. 10) மட்டும் 42.82 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டன.

சென்னை மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடற்கரையை தூய்மையாக பராமரிக்கவும், கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், மெரினாவில் கடை வைத்திருப்போர் மற்றும் சுற்றுலா பயணிகள் குப்பைகளை கொட்டக்கூடாது. என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், விதிகளை மீறி குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஷேர்!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

சென்னை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடற்கரையை தூய்மையாக பராமரிக்கவும், கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘மெரினாவில் கடை வைத்திருப்போர் மற்றும் சுற்றுலா பயணிகள் குப்பைகளை கொட்டக்கூடாது. விதிகளை மீறி குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்’ என கூறியுள்ளது.

சென்னையில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <

சென்னையில் மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூ.15 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் தீபிகா ஹரிஸ் (37). வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர். இவர் நேற்று முன்தினம் காலை, காய வைத்த துணிகளை எடுக்க மாடிக்கு சென்ற போது, மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் பகுதியில் மழை பெய்ததா என கமெண்டில் சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.