Chennai

News January 10, 2026

சென்னை: கட்டாயமாக இருக்க வேண்டிய எண்கள்!

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, சென்னை கமிஷனர்- 044-23452320, TOLL FREE NO-1930 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். *நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News January 10, 2026

சென்னை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 10, 2026

சென்னை: Gpay, Phone pay பயனாளர்கள் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 10, 2026

சென்னை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

சென்னை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 10, 2026

சென்னையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

சென்னை மாநகராட்சியில் இதுவரை 12 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் 29 ,267 பேர் பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தண்டையார்பேட்டை மண்டலம், கலாயணபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) 13-வது முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை நடைபெறும்.

News January 10, 2026

சென்னை: குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம்

image

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறைதீர் கூட்டம் மாதம்தோறும் 2வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் 10ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும். ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கூட்டம் நடைபெறும். எனவே, இந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்கலாம்.

News January 10, 2026

சென்னை: மழையால் மின்தடையா? உடனே CALL!

image

சென்னை மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!

News January 10, 2026

சென்னை: 4 பேர் அதிரடி கைது!

image

குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி, சென்னை கயல்விழி என்பவரிடம் ரூ.38.88 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 4 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் 15-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2.12 கோடி வரை மோசடி செய்தது அம்பலமானது. கைதான ஜோஸ்பின் பியூலா, சித்ரா, கார்த்திகேயன் மற்றும் தினகரன் ஆகியோரிடமிருந்து போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 10, 2026

சென்னை: வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலி!

image

சைதாப்பேட்டையைச் சேர்ந்த கவரேஷ் (19), செனாய் நகரிலுள்ள வாகனங்கள் சுத்தம் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று அவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து வாகனத்தைச் சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற சக ஊழியர் ரஞ்சித்குமாரையும் மின்சாரம் தாக்கியது. தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார், கவரேஷின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

சென்னை: மெட்ரோ பனியால் துடிதுடித்து பலி!

image

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த முகேஷ் குமார் (22), போரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, மதுரவாயல் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் பணிக்கான பிரம்மாண்டமான கிரேன் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மெட்ரோ பணிகளுக்காக சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள், உபகரணங்கள் மீது முறையான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

error: Content is protected !!