Chennai

News October 26, 2024

காவல்துறை சைபர் கிரைம் குறித்து அறிவுறுத்தல்

image

சென்னை மக்கள் தங்களது சமூக வலைதள கணக்குகளை கவனமாக கையாள வேண்டும். பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்படி பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும், சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை தங்களது சமூக வலைத்தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News October 26, 2024

199 மனுக்களை பெற்ற சென்னை காவல் ஆணையர்

image

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில், சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 199 மனுக்களை பெற்றார். இதில் பணி மாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதிய குறைபாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

News October 26, 2024

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News October 25, 2024

சென்னை பேருந்து பயணிகள் கவனத்திற்கு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வார இறுதி நாட்களான 26.10.2024 (நாளை) மற்றும் 27.10.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை (எம்.சி. ரோடு) ஆகிய இடங்களுக்கு காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

News October 25, 2024

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் பெயர் மாற்றம்

image

“நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம்” என்ற பெயரை “OTA நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம்” என்று மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நங்கநல்லுார் மெட்ரோ நிலையம் அருகே, ஒ.டி.ஏ., எனும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்படுகிறது. எனவே, இதன் பெயரை, ‘ஒ.டி.ஏ., நங்கநல்லுார் சாலை மெட்ரோ ரயில் நிலையம்’ என மாற்றும்படி, ராணுவ உயர் அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றப்பட உள்ளது.

News October 25, 2024

தற்காலிக பார்க்கிங் ஆகும் உஸ்மான் ரோடு மேம்பாலம்

image

தி.நகரில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஷாப்பிங்கிற்கு ஏராளமான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.இதையொட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பல மாதங்களாக மூடப்பட்டு கிடக்கும் உஸ்மான் ரோடு மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 25, 2024

வாயு ஏற்பட்ட பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வு

image

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் கேஸ் கசிவு ஏற்பட்டு, 30க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பள்ளி ஆய்வகத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், தற்போது பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

News October 25, 2024

சென்னையில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னையில் உள்ள 2 ஓட்டல்களுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள (ரெஸிடென்சி, ராஜ் பார்க்) 2 ஓட்டல்களுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தி.நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய சோதனையில், வெறும் புரளி என தெரிய வந்தது. தொலைபேசி எண்ணை வைத்து யார் அந்த நபர் என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

News October 25, 2024

50 பைசாவிற்கு ரூ.15,000 அபராதம் நஷ்ட ஈடு

image

சென்னை, பொழிச்சலூரில் வாடிக்கையாளருக்கு 50 பைசாவை திருப்பித் தராத தபால் நிலையத்திற்கு, நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15,000 அபராதம் விதித்தது. சென்னையைச் சேர்ந்த ஒருவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்பிய தொகையான ரூ.29.50க்கு பதில் ₹30 செலுத்தியுள்ளார். ஆனால் அங்கு பணிபுரிந்த அலுவலர் மீதம் சில்லறை தராததால் நீதிமன்றத்தை நாடி, ரூ.15,000 நஷ்டஈடு பெற்றுள்ளார்.

News October 25, 2024

OMR மெட்ரோ சேவை 2027இல் தொடக்கம்

image

ஓ.எம்.ஆர். சாலையில் 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்து, வரும் 2027ஆம் ஆண்டு போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 20-கி.மீ. நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை – 45.4 கி.மீ. பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

error: Content is protected !!