Chennai

News January 19, 2026

எடப்பாடியை சந்திக்க வில்லை; தனியரசு மறுப்பு!

image

எடப்பாடியை சந்திக்க வில்லை என கொங்குப்பேரவை தனியரசு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியரசு கூறிகையில், “அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் சக்கரபாணியை தான் பார்க்க சென்றேன். ஆனால் அவர்களை பார்க்க முடியவில்லை. பசுமை வழிச்சாலை வழியாக அமைச்சர்களை பார்க்கவே சென்றேன். எடப்பாடியை சந்தித்தேன் என்பது தவறான தகவல்” என கூறினார்.

News January 19, 2026

FLASH- சென்னை: இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. 3 பேர் கைது

image

சென்னை அடுத்த வேளச்சேரியில் ZEPTO ஊழியர் பார்த்திபன் என்பவரை வெட்டிக்கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பார்த்திபன் என்பவரை வெட்டி கொலை செய்ய முயன்ற விஷ்ணு, சுந்தர், நந்தார் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், எஞ்சிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தீபாவளியன்று பார்த்திபன் தாக்கியதால் பழிக்குப்பழியாக மதுபோதையில் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

News January 19, 2026

சென்னை: செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு…

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். *சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க*

News January 19, 2026

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஷ் பதிலடி!

image

ஓய்வூதியத் திட்டம் குறித்தான இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இன்று (ஜன.19) கூறுகையில், “ஆட்சியில் இருந்த போது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக பறித்து, அரசு ஊழியர் எதிர்காலத்தையே 2003-ம் ஆண்டில் சிதைத்த அதிமுக’ என்றார்.

News January 19, 2026

JUST IN: சென்னையில் போலீசார் குவிப்பு

image

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார். போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னையில் சுமார் 16,000 போலீசார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

News January 19, 2026

சென்னை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 19, 2026

சென்னை: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

image

சென்னை மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 19, 2026

சென்னை: Zepto டெலிவரி பாய்க்கு கத்தி குத்து

image

சென்னை வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்த பார்த்திபன்(23). Zepto டெலிவரி பணியில் உள்ளார். நேற்று மது அருந்திய நிலையில் வேளச்சேரியில் நடந்து வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை கத்தியால் வெட்டி தப்பி ஓடினர். காயமடைந்த பார்த்திபன் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

சென்னை பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

சென்னையில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்

image

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இதன் காரணமாகக் குறிப்பிட்ட இந்த நாட்களில் காமராஜர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை நேரங்களில் ஒத்திகை நடைபெறுவதால் பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!