Chennai

News January 20, 2026

விஷம் குடித்த பெண்ணை கைப்பற்றிய பெண் காவலர்

image

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று RPF பெண் காவலரான ஜிஷா ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, இளம் பெண் ஒருவர் தனியாக அழுது கொண்டிருப்பதை கவனித்த அவர், பெண்ணிடம் விசாரித்த போது, சமீபத்தில் தனது சகோதரர் உயிரிழந்ததாக கூறிய அந்த பெண், விரக்தியில் விஷம் குடித்ததாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர், பணியாளர்கள் உதவியுடன் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது

News January 20, 2026

சென்னையில் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

சென்னை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இதுகுறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 94458 50829 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். *இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க*

News January 20, 2026

சென்னை: 24ஆம் தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை

image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று (ஜன-20) வரும் 24ம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவித்து நாளை தீர்மானம் நிறைவேறிய பிறகு அவை ஒத்திவைக்கப்படும். பின் வரும் 22, 23 தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடக்க உள்ளன. 24ம் தேதி முதலமைச்சர் பதிலுரை வழங்க உள்ளார்.

News January 20, 2026

சென்னையில் சிறப்பு முகாம்- DON’T MISS

image

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ம் தேதி வெளியிடப்பட்டது. புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம் செய்ய ஜன.18ம் தேதி வரை வழங்கப்பட்ட அவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 4,079 ஓட்டுச்சாவடிகளிலும் வரும் 24, 25ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 20, 2026

சென்னை: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு

image

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 20, 2026

சென்னை: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

image

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு கிளிக் <>செய்து <<>>உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

சென்னை: கழிப்பறையில் சடலமாக கிடந்த கதாசிரியர்

image

வடபழனி பஸ் நிலைய கழிப்பறையில், முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வடபழனி போலீசார், உடலை மீட்டு கே.கே நகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், உயிரிழந்தவர் வடபழனி ஆற்காடு சாலையைச் சேர்ந்த கணேஷ் ராஜா(80) என்பதும், சினிமா கதாசிரியர் என்பதும், வடபழனி பேருந்து நிலையத்தில் இறங்கி, கழிப்பறைக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

News January 20, 2026

சென்னை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

சென்னைமக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 20, 2026

டெலிவரி நபர் மீது தாக்குதல் – EPS கண்டனம்

image

சென்னை வேளச்சேரியில் ZEPTO மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் பார்த்திபன் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி நெஞ்சை பதைக்க வைக்கிறது என எடப்பாடி பழனிசாமி பதிவு செய்துள்ளார். “இன்னும் எத்தனை முறை தமிழக மக்கள் இப்படிப்பட்ட கொடூர காட்சிகளை காண வேண்டும் முதல்வர் அவர்களே” என கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 20, 2026

மெரினாவில் பரபரப்பு!

image

திருச்சியை சேர்ந்த சண்முகவேல் (38) மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்து சண்முகவேலிடம் தகராறு செய்துள்ளனர். அவரை அடித்து உதைத்து அவர் வைத்திருந்த ரொக்க பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். படுகாயம் அடைந்த சண்முகவேல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த முருகா (31) என்பவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!