Chennai

News January 21, 2026

கீழ்ப்பாக்கம் GH-இல் நோயாளி தற்கொலை!

image

சென்னை கீழ்ப்பாக்கம் மருந்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அருணாச்சல மாநிலத்தை சேர்ந்த இலியாகோ (22) என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று ஆறாவது தளத்தில் ரத்த பரிசோதனை செய்ய சென்ற போது, அவருக்கு ரத்த வாந்தி ஏற்படுள்ளது. இதில் மனமுடைந்த அவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 21, 2026

வேப்பேரி நெடுஞ்சாலையில் பயங்கர தீ விபத்து!

image

சென்னை: வேப்பேரி நெடுஞ்சாலையில் இன்று(ஜன.21) அதிகாலை 3 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில், மூன்று ஷூ கடைகள், இரண்டு வீடுகள் தீயில் சேதமடைந்தன. எட்டு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீர்ர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 21, 2026

சென்னை மக்களே செல்போனில் இது கட்டாயம்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

சென்னை: இந்தியன் வங்கியில் வேலை; ரூ.35,000 சம்பளம்

image

சென்னை பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 21, 2026

49வது சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு

image

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கிய 49வது சென்னை புத்தகக் காட்சி இன்று (21.01.2026) நிறைவடைகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் நடைபெற்ற இக்காட்சியில் தினமும் நூல் வெளியீடுகள், இலக்கிய அமர்வுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News January 21, 2026

சென்னை: இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

image

சென்னை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <>லிங்கில் <<>>CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

News January 21, 2026

சென்னையில் மலிவு விலையில் வீடுகள்!

image

சென்னை மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பித்து உங்கள் கனவை நனவாக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

சென்னையில் இன்று முதல் தடை

image

பிரதமர் மோடி வருகிற 23ஆம் தேதி சென்னைக்கு வருகை தருவதையொட்டி, மீனம்பாக்கம் மற்றும் கிண்டி பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன் கேமரா, ஆளில்லா வான்வழி கருவிகள், மைக்ரோ லைட் ஏர் கிராஃப்ட், பாராமோட்டார்ஸ், ஹாட் ஏர் பலூன் போன்றவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை பிப்ரவரி 18 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

சென்னை: சாலையில் சிதறிய ரூ.1½ லட்சம்

image

சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி (28) அடையார் மத்திய கைலாஷ் ரயில் நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு பையில் கத்தை கத்தையாக ரூ.500 நோட்டுகள் இருந்ததை பார்த்துள்ளார். அதில் சுமார் ரூ.1½ லட்சம் இருந்துள்ளது. யாரோ அந்த பணத்தை தவறவிட்டிருக்கலாம் என்று கருதிய அவர், கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் அந்த பணத்தை ஒப்படைத்தார். பின்னர் அஜித்குமார் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News January 21, 2026

மரம் வெட்ட அனுமதி கோரி குவியும் விண்ணப்பங்கள்

image

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய ஆன்லைன் வசதிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 19, நிலவரப்படி, ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் இணையதளம் வழியாக 41 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தடையாக உள்ள மரங்களின் படங்களை பதிவேற்றி, உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கலாம். இந்த புதிய நடைமுறை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, அனுமதியைப் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது.

error: Content is protected !!