Chennai

News January 22, 2026

சென்னையில் சிறுவனை கடித்து குதறிய நாய்

image

சென்னை கீழ்ப்பாக்கம் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுவனை வளர்ப்பு நாய் கடித்து குதறி உள்ளது. மேனியல் என்பவர் தனது நாயை இன்று நடைபயிற்சி அழைத்து சென்றபோது சிறுவனின் மார்பு, தொடை பகுதியில் கடித்துள்ளது. பலத்த காயம் அடைந்த சிறுவன் கீழ்ப்பாக்கம் அரசு பொதுமருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 22, 2026

சென்னை: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 22, 2026

சென்னையில் கலை போட்டிகள்

image

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 05-08, 09-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் பிப்.7ம் தேதி காலை 9மணியளவில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

சென்னையில் துடிதுடித்து பலி

image

சென்னை கோயம்பேட்டில் இன்று (ஜன-22) காலை காய்கறி வாங்க அரும்பாக்கத்தில் இருந்து ராசு (58) என்பவர் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, கோயம்பேடு அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து கோயம்பேடு போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விபத்து குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News January 22, 2026

மெரினாவில் 300 கடைகள் மட்டும் தான்!

image

மெரினாவில் கடைகள் ஒதுக்கீட்டை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி என். பால் வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். உதவியாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி டி. மோகன்ராஜ் மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற துணை பதிவாளர் ஆர். ரங்கநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில் 300 கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை கமிஷனர் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

BREAKING: சென்னை மெட்ரோ சேவையில் கோளாறு

image

சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் முறையில் நேற்று இரவு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆன்லைன் டிக்கெட் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்கள், சி.எம்.ஆர்.எல். கவுன்டர்கள் அல்லது மொபைல் செயலி மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

News January 22, 2026

சென்னை: விபத்தில் இருவர் துடிதுடித்து பலி!

image

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பின் பகுதியில் வந்த போது, அந்த வழியே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கோகுல்ராஜ் மற்றும் தனாய் மண்டல் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த பரங்கிமலை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 21, 2026

சென்னை வரும் ராகுல் காந்தி

image

சட்டமன்ற தேர்தலையொட்டி வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி ராகுல் காந்தி சென்னையில் நடைபெறும் காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாட்டிற்கு வருகை தர உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். ராகுல் காந்தி வருகையையொட்டி உரிய பாதுகாப்பு அளிக்க, டி.ஜி.பி. அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மாநில தலைமை தெரிவித்துள்ளது.

News January 21, 2026

சென்னை வரும் பிரதமர் மோடி

image

நாளை மறுநாள் NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெங்கேற்கவுள்ளார். இதற்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. அதன்படி, 23ம் தேதி மதியம் 12:40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு, 2:15 மணிக்கு சென்னை ஏர்போர்ட் வந்தடைகிறார். ஹெலிகாப்டர் மூலம் 2:50 மணிக்கு NDA மாநாட்டுக்கு சென்று, 4:15 வரை மாநாட்டில் பங்கேற்கிறார். பின் 4:20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, 5 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

News January 21, 2026

சென்னை: லாரி மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி!

image

சென்னை பள்ளிக்கரணை அருகே சாலையில் இன்று பிற்பகல் சென்ற பைக் மீது லாரி மோதியது. இதில் பைக்கில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரித்ததில், இறந்தவர் அருணாச்சலம் (51) என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!