Chennai

News November 6, 2024

மருத்துவமனையில் பணம் கையாடல் செய்த பெண் கைது

image

சென்னை பிரபல தனியார் மருத்துவமனையில், நோயாளிகள் செலுத்திய கட்டணத்தை, தனது வங்கி கணக்குக்கு மாற்றி ரூ.52 லட்சம் கையாடல் செய்த பெண் கணக்காளரை, போலீசார் கைது செய்தனர். மேலும், நோயாளிகள் செலுத்திய கட்டணத்தை, அந்த பெண் எப்படி தன் கணக்கிற்கு மாற்றினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 6, 2024

நாளை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

image

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை (நவ.7) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் மழை பெய்ய உள்ளது.

News November 6, 2024

பிரபல A+ ரவுடி சென்னையில் கைது

image

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வெள்ளை பிரகாஷை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். எருக்கஞ்சேரியைச் சேர்ந்த பிரபல A+ ரவுடி வெள்ளை பிரகாஷ். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல், வெடிகுண்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1 வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜராக நேற்று காலை சென்னை வந்தவரை பாரிமுனை பகுதியில் கைது செய்தனர்.

News November 6, 2024

ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முகாம்

image

ஒன்றிய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம், ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுடைய உயிர் வாழ் சான்றிதழ் வழங்குவதற்காக பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள பொது அஞ்சலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும், டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று முகம், கைவிரல் ரேகை ஆகியவை எடுத்து சான்று பெறப்படுகிறது.

News November 6, 2024

கமல் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம்

image

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை, மக்கள் நலப்பணிகளுடன் வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் தெரிவித்துள்ளார். கமலின் பிறந்தநாளை நாளை (நவ.7) தமிழகம் முழுவதும் கொண்டாட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நாளை காலை 9 மணிக்கு பல்வேறு நலப்பணிகளுடன் கொண்டாடப்படுகிறது.

News November 6, 2024

ரேஷன் கடையில் வேலை: நாளை கடைசி நாள்

image

சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) <>ஆன்லைனில்<<>> விண்ணப்பிக்கலாம். சென்னையில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News November 6, 2024

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

image

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இதில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். நடிகர் விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருப்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட இருக்கிறது.

News November 6, 2024

சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடை கொண்டு செல்லவும். வங்கக்கடலில் வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது. இதனால் தமிழகத்தில் 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

News November 6, 2024

ஆவடி – சென்ட்ரலுக்கு இன்று முதல் புதிய மின்சார ரயில்

image

ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புதிய மின்சார ரயில் வரும் 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில், ஆவடியில் இருந்து (இன்று நவ.6) மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 6.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். சென்னையில் பொது போக்குவரத்து வசதிகளில் புறநகர் மின்சார ரயில் சேவை முக்கியமானதாக உள்ளது. இதில் தினசரி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். ஷேர் பண்ணுங்க

News November 6, 2024

இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் – அமைச்சர்

image

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இந்த மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (நவ.5) செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஆம்னி பேருந்து நிலையத்தில், 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் கிளாம்பாக்கத்தில் சற்று நெரிசல் குறையும்” என்று கூறினார்.

error: Content is protected !!