India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை ஐஐடியில் மெய்நிகர் தொழில்நுட்ப மைய விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று பெற்றுக் கொண்டார். AI தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பம் அவசியம். மேலும், புதிய தொழில்நுட்பம் இந்தியாவிலிருந்து உருவாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாமல்லபுரம் கடலில் குளித்து மாயமான அண்ணா நகரைச் சேர்ந்த கிரிஷ் கேசவ், ரிஸ்வான் ஆகிய 2 பேரின் உடல்கள் நேற்று கரை ஒதுங்கின. உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர் கண்ணீர் விட்டு கதறினர். கடந்த 16ஆம் தேதி நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கடலுக்கு அடித்துச் செல்லப்பட்ட இருவரும் உடலையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வந்த நிலையில், நேற்று அவர்களது உடல்கள் கரை ஒதுங்கின.
மாமல்லபுரம் கடலில் குளித்து மாயமான, அண்ணா நகரைச் சேர்ந்த கிரிஷ் கேசவ், ரிஸ்வான் இருவரது உடல்களும் நேற்று கரை ஒதுங்கின. உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர் கண்ணீர் விட்டு கதறினர். 16ஆம் தேதி நண்பர்களுடன் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி, கடலுக்கு அடித்துச் செல்லப்பட்ட இருவரும் உடலையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வந்த நிலையில், நேற்று அவர்களது உடல்கள் கரை ஒதுங்கின.
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற 33ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். இதில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் பணிபுரிகின்ற விஞ்ஞானி ஸ்ரீனிவாச மூர்த்தி, திரைப்பட இயக்குனர் பி.வாசு, திரைப்பட நடிகர் அர்ஜூன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டமும் மற்றும் சாதித்த மாணவர்களுக்கு பட்டமும் வழங்கினார்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான காசிமா(17), அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில், 3 பிரிவுகளில், 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இவர், தனது கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியால், உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். காசிமாவுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதிய வாக்காளர் பதிவு மற்றும் திருத்தங்களுக்கு தேவையான படிவங்களை Voters Helpline செயலி அல்லது nvsp.in இணையதளம் மூலமாக தேவையான படிவத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம். புதிய வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டுமா அல்லது உங்கள் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் பொருத்தமான படிவத்தைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம். பெயர் திருத்தும், சேர்த்தால், நீக்குதல் போன்றவற்றை செய்து கொள்ளுங்கள்.
சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் தகவல்களைப் பெற்று, பாடப் பொருட்களை எளிதாக புரிந்து கொள்ளவும், பெற்ற தகவல்களை தக்கவைத்து கொள்ளவும் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைப்பதற்கான செயல் திட்டங்களை கல்வித்துறை முன்னெடுத்துள்ளது.
சென்னை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா, ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதிய உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது. 5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும். சென்னை மாநகராட்சி பகுதியில் தலா ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும்.
2.0 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் அனைத்து வீட்டு உபயோகத் தண்ணீர் மற்றும் கழிவுநீரை சேகரித்து மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து solidwastecorp7@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.