India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமியர்களின் நலனுக்காக 5 முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார். உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ. 5,000-ஆகவும், இருசக்கர வாகன மானியம் ரூ. 50,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்றும், உருது ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

மாதவரம் பேருந்து மற்றும் லாரி முனையத்தில் (MBTT) காலியாக உள்ள வணிகக் கடைகளை மின்னணு டெண்டர் (e-Tender) மற்றும் மின்னணு ஏலம் (e-Auction) முறையில் நேரடி விற்பனை செய்ய சிஎம்டிஏ (CMDA) அறிவித்துள்ளது. மொத்தம் 16 கடைகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றின் குறைந்தபட்ச விலை ரூ.27.18 லட்சம் முதல் ரூ.5.10 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த e-Auction முதலீட்டாளர்களுக்கு புதிய வணிக வாய்ப்புகளை உருவாகும்.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

சென்னை அரசு கல்லூரி வளாகத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கேண்டீன் மாஸ்டர் குணசேகர் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். பெண் சற்று மனவளர்ச்சி குன்றியவர் போல உள்ளதை பயன்படுத்தி கல்லூரி கேண்டீனில் உணவு வாங்கும் போது பாலியல் ரீதியாக சிலர் அத்துமீறி உள்ளனர். இது குறித்து மாணவி கல்லூரி ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்த நிலையில் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று காலை சில பகுதிகளில் குறுகிய கால மின் தடை செய்யப்படும் என்று TANGEDCO அறிவித்துள்ளது. அண்ணாநகர், முகப்பேர் மற்றும் நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள TANGEDCO பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. பல வார்டுகளில் தெருவிளக்கு பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று காலை சில பகுதிகளில் குறுகிய கால மின் தடை செய்யப்படும் என்று TANGEDCO அறிவித்துள்ளது. அண்ணாநகர், முகப்பேர் மற்றும் நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள TANGEDCO பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. பல வார்டுகளில் தெருவிளக்கு பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை மெட்ரோ பணிகளுக்காக தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மண்டலம் 9, 10, 13 ஆகிய பகுதிகளில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் தற்காலிகமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

பரங்கிமலையைச் சேர்ந்த கார்த்திக் (21), 6 மாதங்களுக்கு முன்பு பாக்யா என்பவரைக் காதலித்து மணந்தார். அடிக்கடி மதுபோதையில் கார்த்திக் வீட்டிற்கு வந்த போது ஏற்பட்ட தகராறில், அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றார். இதனால் மனமுடைந்த கார்த்திக், தனது சித்தியிடம் போனில் தற்கொலை பற்றி கூறிவிட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.