Chennai

News January 31, 2026

சென்னையில் உயர்தர கஞ்சா கடத்தல்!

image

பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு குழுவினர், கடந்த 29ஆம் தேதியன்று ஏழுகிணறு பகுதியில் உயர்தர கஞ்சா வைத்திருந்த செல்வ கணபதி (30), அப்துல் உமர்கான் (31) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் கிடைத்த தகவலின் பேரில் பெரியமேடு பகுதியில் பதுங்கியிருந்த தௌசீப் ஹாஜி, நபில் ஜலீல் ஷேக், இஸ்மாயில் முஜ்வர், இம்ரான், சந்த் ஜாபர் ஷேக் ஆகியோரை நேற்று கைது செய்து, 7 கிலோ உயர்தர கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News January 31, 2026

சென்னையில் உயர்தர கஞ்சா கடத்தல்!

image

பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு குழுவினர், கடந்த 29ஆம் தேதியன்று ஏழுகிணறு பகுதியில் உயர்தர கஞ்சா வைத்திருந்த செல்வ கணபதி (30), அப்துல் உமர்கான் (31) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் கிடைத்த தகவலின் பேரில் பெரியமேடு பகுதியில் பதுங்கியிருந்த தௌசீப் ஹாஜி, நபில் ஜலீல் ஷேக், இஸ்மாயில் முஜ்வர், இம்ரான், சந்த் ஜாபர் ஷேக் ஆகியோரை நேற்று கைது செய்து, 7 கிலோ உயர்தர கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News January 30, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னையில் இன்று (ஜன.30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

சென்னை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

மகாத்மா காந்தியும் சென்னையும்!

image

மகாத்மா காந்தி 1896 முதல் 1946 ஆம் ஆண்டு வரை, 20 முறை சென்னைக்கு வருகை தந்துள்ளார். 1896 ஆம் ஆண்டு முதல் முறையாக சென்னை வந்த காந்தி, ஜார்ஜ் டவுனில் 14 நாட்கள் தங்கி, பல்வேறு அரசியல் கூட்டங்களை முன்னெடுத்தார். காந்தியின் நினைவாக சென்னையில் ‘உத்தமர் காந்தி சாலையும்’, கிண்டியில் ‘காந்தி மண்டபமும்’ அமைக்கப்பட்டுள்ளது. காந்தியின் நினைவு தினமான இன்று (ஜன.30) அவரை நினைவு கூர்வோம்.

News January 30, 2026

சென்னை: தமிழ் தெரிந்தால் போதும், வங்கியில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News January 30, 2026

சென்னை ஏரிகளின் தற்போதைய நிலவரம்!

image

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான ஏரிகளின் இன்றைய நீர் இருப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3363 மி.கன அடியும், புழல் ஏரியில் 3032 மி.கன அடியும் நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் 536 மி.கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 422 மி.கன அடியும், வீராணம் ஏரியில் 914 மி.கன அடி நீர் உள்ளது.

News January 30, 2026

சென்னையில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

சென்னை: உங்கள் வீட்டில் சிலிண்டர் உள்ளதா?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News January 30, 2026

சென்னையில் அதிரடி மாற்றம்

image

சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில், இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, ராமாபுரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு உட்பட, இன்ஸ்பெக்டர்களை நேற்று பணியிட மாற்றம் செய்து, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!