India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எழும்பூர் – விழுப்புரம் இடையே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நாளை (நவ.24) முதல் நவ.28ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிற்பகல் 13.20 மணி முதல் பிற்பகல் 16.20 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு நவ.27, 28 ஆகிய தேதிகளில் 6 செ.மீ முதல் 12 செ.மீ வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு அந்த தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் மழை தொடங்கும் எனவும் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வால்டாக்ஸ் சாலை தண்ணீா்த் தொட்டி தெருவில் 700 குடியிருப்புகள், ஸ்டான்லி மருத்துவமனை அருகில் நீா்வள ஆதாரத் துறைக்குச் சொந்தமான இடத்தில் 776 குடியிருப்புகள் என மொத்தம் 1,476 புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. மேலும், பிற துறைகளில் உள்ள முடிவுற்ற பணிகளின் தொடக்க விழா என ரூ.1,000 கோடிக்கான திட்டங்களின் தொடக்க விழா நவ.30ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வா் இந்தத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. SHARE பண்ணுங்க.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நிலங்கள் கொடுத்த விவசாயிகளுக்கு நாளை (நவ.23) காலை 10.00 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் விருந்து அளிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் கட்சி நிர்வாகிகளுக்கு நாளை அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக்கடைகளில் துவரம்பருப்பு வினியோகிக்கப்படவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு தடையின்றியும், தாமதமின்றியும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய விக்னேஷின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். சில நாட்களுக்கு முன்பு கிண்டியில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய வழக்கில் விக்னேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் 5 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கான கணித திறமை தேர்வு வரும் ஜன- 5ம் தேதி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க டிசம்பர்- 20க்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மாணவ, மாணவியரின் கணித திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் இன்று (நவ.22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள், தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக, கடற்கரையில் இருந்து புறப்படும் 14 ரயில்கள், தாம்பரத்தில் இருந்து புறப்படும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற 200 ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படுவதைவிட 5 – 10 நிமிஷம் தாமதமாக இயக்கப்படும். ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.