Chennai

News February 5, 2026

BREAKING: சென்னையில் பறவை காய்ச்சல்

image

சென்னை அடையாறில் திடீரென 10க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. அவைகளை கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் பரிசோதனை செய்ததில் அந்த காகங்கள் தீவிர H5N1 பறவைக்காய்ச்சலால் கொத்துக்கொத்தாக உயிரிழந்தது தெரியவந்து. மேலும், பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News February 5, 2026

சென்னை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

சென்னை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். ஷேர் பண்ணுங்க.

News February 5, 2026

பேராசிரியர் வ. ஜெயதேவன் காலமானார்!

image

அகராதியியலாளரும், பேராசிரியருமான வ. ஜெயதேவன் காலமானார். சென்னை பல்கலைக் கழகத் தமிழ் மொழித்துறையில் பேராசிரியராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பேரகராதி விரிவாக்க திட்ட பணிகளில் தன்னை முழுமையாக ஈபடுத்தி கொண்டவர். பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் மற்றும் அகராதியியலாளர்களிடையே ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News February 5, 2026

சென்னை: உயிருக்கு எமனாய் வந்த லோன் ஆப்!

image

நெசப்பாக்கம் கானு நகரைச் சேர்ந்தவர் சுபாஷ் (19). மொபைல் போன் செயலி மூலம் வந்த விளம்பரத்தில், 35,000 ரூபாய் செலுத்தினால் 85,000 ரூபாய் ‘லோன்’ உடனே வழங்கப் படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி செலுத்திய பிறகு 85,000 ரூபாய் பணம் வழங்கப்படவில்லை. இதனால் மனமுடைந்தவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

சென்னை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

image

புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஷாம்பிரதீஷ் (18). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார். நேற்று(பிப்.4) காலை தனது அறையிலிருந்து வெளியே வராததால், தாய் பத்மா சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக்க டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

சென்னை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

image

புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஷாம்பிரதீஷ் (18). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார். நேற்று(பிப்.4) காலை தனது அறையிலிருந்து வெளியே வராததால், தாய் பத்மா சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக்க டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 4, 2026

சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <>இந்த இணையதளங்களில் <<>>விண்ணப்பியுங்க. உங்க நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்

News February 4, 2026

சென்னை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

image

சென்னை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News February 4, 2026

சென்னை: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

சென்னை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!