India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயலின் காரணமாக, சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, ரஃபி சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபெங்கல் புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களின் சில நீர்நிலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மிதமானது முதல் அதிக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது, சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ளது. சென்னை மாநகர பேருந்து சேவை வழக்கம்போல் இயங்கும். சென்னை மெரினா கடற்கரை சாலை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. ECR, OMR சாலைகளில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. IT ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்க வேண்டும்.
சென்னை பட்டினப்பாக்கம், MRC நகர், தி.நகர், சைதப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயபுரம், திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், கோயம்பேடு, கிண்டி, புது & பழைய வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, அடையாறு, வியாசர்பாடி, விருகம்பாக்கம், வள்ளுவர் கோட்டம். ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், காசிமேடு, எழும்பூர், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை ருதரத்தாண்டவம் ஆடி வருகிறது. உங்க ஏரியாவில்?
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
மழையின் தீவிரம் அதிகமாக இருந்தாலும் சனிக்கிழமை அட்டவணைப்படி அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ நிலையங்களில் பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கான 13 விமானங்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, தூத்துக்குடி, மைசூர், புவனேஸ்வர், கவுஹாத்தி பகுதிகளுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வானிலையை பொறுத்து நாளை விமானங்கள் மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. அந்த செய்தியில் 30.11.2024 அன்று பிற்பகல் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது 70-90 கிமீ வேக காற்றுடன் கனமழை- அதிகன மழை பெய்யக்கூடும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. உங்களுக்கும் வந்ததா?
சென்னைக்கு நாளை (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் OMR, ECR சாலைகளில் பொது போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், IT ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.