India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் காலை 9:30 முதல் மாலை 6 மணி வரை ஐஸ்கிரீம், பிஸ்கட், பன், பப்ஸ், கேக் தயாரிப்பது சந்தைப்படுத்துவது குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10 வகுப்பு தகுதியுடையோர் பயிற்சி கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 8668102600 என்ற எண்ணை அழைக்கலாம். சுய தொழில் தொடங்க செம்ம வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

செம்மஞ்சேரியை சேர்ந்த சதீஷ். மனைவி தேவி (27). தேவியின் நடத்தையில் சதீஷ் சந்தேகம் அடைந்ததால் தேவி அவரது சகோதரி வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம், பேருந்து நிறுத்தம் நோக்கி தேவி நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த சதீஷ். மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட ஓட தேவியை குத்தினார். புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் சதீஷை நேற்று கைது செய்தனர்.

சென்னை கிண்டி மெட்ரோ ரயில் அருகில் உள்ள பழக்கடையில், தோழியுடன் ஜூஸ் குடித்த பெண்களிடம் இருவர் பட்டப்பகலில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான தளபதி (34) என்பவரை பிடித்து தர்ம அடி கொடுத்து அக்கம் பக்கத்தினர் கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் தப்பி ஓடிய உதயகுமார்(39), என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (பிப்.11) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு கூறினார். அப்போது ஊரக உள்ளாட்சி பணியாளர்களை காவலர்கள் கைது செய்தனர். அவர்களுடன் சீமானும் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (பிப்.11) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு கூறினார். அப்போது ஊரக உள்ளாட்சி பணியாளர்களை காவலர்கள் கைது செய்தனர். அவர்களுடன் சீமானும் கைது செய்யப்பட்டார்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! *இதனை ஷேர் பண்ணுங்க மக்களே*

சென்னை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044–25342441 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. *மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க*

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டியில் இன்று காலை புதிய தனியார் மருத்துவமனை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவமனையில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ள என்பதை குறித்து பார்வையிட்டார். மேலும் சிறப்பம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சென்னை வியார்பாடியை சேர்ந்தவர் நந்தினி (34). இவர் குடும்பதகராறு காரணமாக நேற்று (பிப்.10) உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தகவலறிந்து வந்த வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.