Chennai

News February 13, 2026

கோயம்பேட்டில் பேருந்தை கொளுத்திய ஆசாமி!

image

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பிளாட்பாரத்தில் நின்ற பேருந்தில் தீ வைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். உடனடியாக தீ அணைக்கப்பட்ட நிலையில், அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒருவர் பேப்பரில் தீ பற்ற வைத்து பேருந்துக்குள் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News February 13, 2026

குடிநீர் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு!

image

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், பொதுமக்களின் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான குறைகளைக் களைவதற்காக “குறை தீர்க்கும் கூட்டம்” நாளை பிப். 14, (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டம் சென்னையின் 15 பகுதி அலுவலகங்களிலும் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 13, 2026

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 12, 2026

சென்னை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சென்னையில், 19 மண்டல உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும், (பிப்.14) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடக்க உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பிழை திருத்தம், மொபைல் போன் எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படும். மேலும், ரேஷன் கடைகள் செயல்பாடு, விற்கப்படும் பொருட்கள் சேவைகளின் குறைபாடு குறித்தும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News February 12, 2026

போலீசார் பணிகளை தவிர்க்க கூடாது; உயர்நீதிமன்றம் கருத்து!

image

போலீசார் பணிகளை தவிர்க்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிப் -12 தெரிவித்துள்ளது. சென்னையில் பைக் ரேஸ் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘போலீசார் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை தவிர்க்க கூடாது. 2022ல் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது’ என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

News February 12, 2026

சென்னை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

image

சென்னை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 12, 2026

சென்னை: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

News February 12, 2026

மெரினாவில் 300 கடைகளுக்கு குலுக்கள் முறையில் தேர்வு

image

சென்னை மெரினா கடற்கரையில் அமைய உள்ள 300 கடைகளுக்கான குழுக்கள் முறையில் தேர்வு இன்று (பிப்.12) ரிப்பன் மாளிகையில் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் மேற்பார்வையில் நடைபெறுகிறது. 4 திட்ட பகுதிகளில் மொத்தமாக 300 கடைகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு திட்ட பிரிவுக்கும் ஐந்து சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

News February 12, 2026

சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

News February 12, 2026

சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!