India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நவீன அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், வரும் டிச.31ஆம் தேதி வரை மாநகராட்சி நிர்வாகம் நீட்டித்துள்ளது. அதற்கான சிறப்பு முகாம், கடந்த நவ.22ஆம் தேதி தொடங்கியது. நவ.30ஆம் தேதி வரை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 5 ஆயிரத்து 186 வியாபாரிகள் மட்டுமே நவீன அடையாள அட்டை பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்கள், ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. கனமழை முடிவுற்றதைத் தொடர்ந்து, மாநகராட்சியின் 871 பூங்காக்களிலும் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விழுந்த மரங்கள், மரக்கழிவுகள், குப்பை அகற்றப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக ஆணையர் குமரகுருபன் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் இருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த அஜித்குமார் (27), ரயிலிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்காக பொதிகை ரயிலில் வந்து கொண்டிருந்தார். ஃபெஞ்சல் புயல் பாதிப்பால், ரயில் விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் எறியுள்ளார். ஏறிய கொஞ்ச நேரத்திலேயே மயங்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
பல இடங்களில் வெள்ளம் வடியாததால், பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். கடலூர், சேலம், விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், நீலகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை, தீவிர மழைப்பொழிவு இருந்தால் விடுமுறை அறிவிக்கப்படலாம்.
சென்னையில் ஃபெஞ்சல் புயல் தாக்கம் குறைந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள 871 பூங்காக்களிலும் தூய்மைப் பணி மாநகராட்சி ஊழியர்களால் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இன்று ( டிசம்பர்.03) காலை முதல் அனைத்து பூங்காக்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கனமழை பாதிப்பால் சென்னை- விழுப்புரம் இடையே ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம்- திருவண்ணாமலை வழித்தடத்திலும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையேயான ரயில்வே மேம்பாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னும் இன்னும் அதன் தாக்கம் குறையாத நிலை உள்ளது. பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்திருப்பதால், மக்களுக்கு நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. சில இடங்களில் உள்ள மக்கள் காய்ச்சல் காரணமாக அவதிப்படுகின்றனர். பெருநகர சென்னை குடிநீர் வாரியம் மழைக்காலங்களில் தண்ணீரை காய்ச்சி வடிகட்டி பருகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் 408 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பஸ்கள் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவற்றில் முதல்கட்டமாக 58 தாழ்தள பஸ்கள் கடந்த ஆகஸ்டு மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கினர்.
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. சென்னையில் 32 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 1018 நபர்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கபட்டுள்ளது. 22000 பேர் மழைக்கால மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி.
Sorry, no posts matched your criteria.