India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நோக்கில் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 1.5 லட்சம் கிலோ அரிசி ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி நிவாரணப் பொருட்கள் ஏற்றிய வாகனத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.சி.ஹோஸ்ட் டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.mhc.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.23ஆம் தேதி ஆகும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5% கூடுதலாக பெய்துள்ளது. இதனால், சென்னை மாநகருக்கு தேவையான மழைநீர் கிடைத்துள்ளது. நகரின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1,675 கனடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 2,217 கன அடியாக உள்ளது. இதனால் அடுத்த ஒரு வருடத்திற்கு சென்னைக்கு தண்ணீர் பஞ்சமே இருக்காது. ஷேர் பண்ணுங்க
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கீழ்பாக்கம், கிண்டி, திருவொற்றியூர், புது & பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம், எண்ணூர், மணலி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணா நகர், அம்பத்தூர், அடையாறு, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில்?
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணர்கள் மீது பெற்றோர்களின் அனுமதியின்றி கடந்த அக்.19ஆம் தேதி தாங்கும் திறன் சோதனை நடத்தியதாக எழுந்த புகாரில், பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாணவர்கள் மீது எந்தவொரு திட, திரவ மருந்தும் செலுத்தப்படவில்லை என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களாக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டிக்கும் வகையில், நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துலக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முகப்பேர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, மண்ணடியைச் சேர்ந்த இருவர் நேற்று கைதாகினர். அதில் மன்சூர் அலிகான் மகனும் ஒருவர்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களுக்கு குடிநீர் வாரியத்தின் சார்பில் இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் அல்லது குறைகள் இருந்தால் 044 4567 4567 என்ற எண் அல்லது கட்டணமில்லா எண்: 1916-ஐ அழைக்கலாம் என குடிநீர் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு நோய்த் தொற்றை தடுக்க கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சென்னையில் மட்டும் இதுவரை 2,839 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 1,53,120 பேர் பயனடைந்துள்ளனர். நேற்று 192 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.