Chennai

News December 7, 2024

மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு

image

வங்கக் கடலில் இன்று அடுத்த 12 மணி நேரத்தில் அதாவது மாலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், டிச.11, 12இல் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை/இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்.

News December 7, 2024

ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து

image

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில், நாளை (டிச.8) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து செய்து, புதிய கால அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை, இந்த ரத்து தொடரும். கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்போது 200 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News December 6, 2024

ஃபெஞ்சல் புயல்: சென்னை வந்துள்ள மத்திய குழு

image

ஃபெஞ்சல் புயலால் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய உள்துறை இணைச்செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான மத்தியக் குழு சென்னை வந்துள்ளது. இக்குழு நாளை (டிசம்பர். 07) காலை முதல் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு பணிகளை மேற்கொள்கிறது. முன்னதாக அக்குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளனர்.

News December 6, 2024

அம்பேத்கருடன் செல்ஃபி எடுத்த விஜய் 

image

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்திற்கு வருகை தந்துள்ளார் தவெக தலைவர் விஜய். சற்று நேரத்தில் புத்தக வெளியீட்டு விழா தொடங்க உள்ள நிலையில், அண்ணல் அம்பேத்கர் சிலையுடன் அவர் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

News December 6, 2024

அம்பேத்கர் நூலை இன்று வெளியிடுகிறார் விஜய்

image

ஆதவ் அர்ஜுனா நிறுவனம் சார்பில், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (டிச.6) சென்னையில் நடைபெறுகிறது. இந்த புத்தகத்தை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்கிறார். மேலும், அம்பேத்கரின் பேரனும், சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டேவும் இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 6, 2024

பல்லாவரத்தில் 3 பேர் பலி: 30 பேர் மருத்துவமனையில் அனுமதி

image

சென்னை பல்லாவரம் கன்டோன்மண்ட் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 37 பேரில் 3 பேர் உயிரிழந்ததற்கு, மாசடைந்த குடிநீரே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு முடிவுகள் மற்றும் குடிநீர் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும்” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

News December 6, 2024

தொழில்முனைவோருக்கு ஆன்லைன் வழியாக AI பயிற்சி

image

அண்ணா பல்கலைக்கழகம், தொழில்முனைவோர்களுக்கு, ஆன்லைன் வழியாக AI பயிற்சி, 45 நாட்களுக்கு வழங்க உள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe7AITHb4HwgHMsMDR8xygp5OeMRNJcpc7WMbpDPpLmL0txtA/viewform படிவத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/ மற்றும் cedau.outreach@gmail.com, 044 22359287/89 ஆகிவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

News December 5, 2024

புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும்- அமைச்சர்

image

பட்டினப்பாக்கத்தில் உயிரிழந்த சையத் குலாப் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதிலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும், இடைப்பட்ட காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 வழங்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

News December 5, 2024

மீன் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டிருக்கலாம்- அமைச்சர்

image

பல்லாவரம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “குடிநீரில், கழிவுநீர் கலந்ததா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தால் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஏரியில் பிடித்த மீனை சாப்பிட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

News December 5, 2024

நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த முதல்வர்

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நோக்கில் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 1.5 லட்சம் கிலோ அரிசி ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி நிவாரணப் பொருட்கள் ஏற்றிய வாகனத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார்.

error: Content is protected !!