India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை காவல்துறை அதிரடியாக நேற்று ஒரே நாளில் பல்வேறு வழக்குகளில் 7 பேரை கைது செய்தனர். அதன்படி, வண்ணாரப்பேட்டை போலீசார், போதைப்பொருள் வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்து, 2 கிராம் மெத்தம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர், அமைந்தகரை போலீசார், ஆட்டோ ஓட்டுநரின் செல்போனை திருடிச் சென்ற 2 நபர்கள், ஏழுகிணறு போலீசார் கல்லூரி மாணவியிடம் தகராறு செய்து தாக்கிய 2 பேர் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.
பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பணிகள் 90 % நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரிக்குள் 100 சதவீத பணிகள் நிறைவடைந்து மார்ச்-ஏப்ரலில் 90 கிமீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்த இருப்பதாக இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். மேலும் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதும் போரூர்-பூந்தமல்லியில் 2025 டிசம்பரில் மெட்ரோ ரெயில் சேவை நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் இன்று (டிச.8) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 5+5 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தியாகராய நகர் வரை 5+5 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, வேலை நாட்களில் 200 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. பராமரிப்பு காரணமாக, வரும் நாளை (டிச.9) திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், 125 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன என்றும், 20 நிமிட இடைவெளிக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கு வரவழைத்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.
சைதாப்பேட்டையைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவிகள் மஞ்சுளா, தீத்தியா ஆகியோர் பெசன்ட் அவென்யூ சாலையில் நேற்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தனியார் பேருந்து ஒன்று இருவர் மீதும் பலமாக மோதியது. இதில் 1 மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொரு மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஓட்டுநர் ராஜாராமுவை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகர் அருகே கல்லூரி மாணவர் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காரை நிறுத்திவிட்டு தனது தோழியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ரோந்து போலீசாரைக் கண்டு பயந்து, காரை வேகமாக இயக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையிலான வழித்தடத்தில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை மின்சார ரயில்களின் அட்டவணையை தெற்கு ரயில்வே மாற்றப்பட்டுள்ள நிலையில், தாம்பரம் – பிராட்வே வரை 10 பேருந்துகளும், தாம்பரம் – செங்கல்பட்டு வரை 05 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி – தி.நகர் வரை 05 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
கடந்த 1 வருடமாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி தோழி மூலமாக கல்லூரி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்ட நபர்கள், மாணவியின் நிலையை பயன்படுத்தி வால்டாக்ஸ் சாலை, பெரியமேடு பகுதிகளில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், செயல்பாட்டுக் காரணங்களுக்காகவும், சென்னை கடற்கரை-தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, வரும் திங்கள் (டிச.9) முதல் 125 மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்படும் என்றும், பொதுமக்கள் இந்த அறிவிப்புக்கு ஏற்றவாறு தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
Sorry, no posts matched your criteria.