Chennai

News February 18, 2026

சென்னை: மழைநீர் வடிகாலுக்கு ரூ.693 கோடி!

image

சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்க ரூ.10கோடி மதிப்பில் பசுமை சென்னை திட்டம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.693 கோடி ஓதுக்கீடு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு, ரூ.323 கோடி, பன்முக ஒருகினைப்பு போக்குவரத்திற்கு ரூ.40 கோடி, அவசர கால கட்டுபாட்டு மைய திட்டத்திற்கு ரூ.5 கோடி, கல்வி வளர்ச்சிக்கு ரூ.11 கோடி, சுகாதார துறைக்கு ரூ.4.35 கோடி, சிறப்பு திட்டங்களுக்கு ரூ.157 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளன.

News February 18, 2026

சென்னை மாநகராட்சியின் 90 அறிவிப்புகள்!

image

சென்னை மாநகராட்சியின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டினை மேயர் பிரியா இன்று(பிப்.18) வாசித்து நிறைவு செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரை சுமார் 1 மணி நேரம் 36 நிமிடங்கள் நீடித்தது. இந்த உரையின் போது மாநகர துறைகள் வாரியாக மொத்தம் 90 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News February 18, 2026

சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு மோர்!

image

சென்னை மாநகராட்சியின் 2026- 27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (பிப்.18) தாக்கல் செய்தார். அதில், கோடைக்காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் தாகத்தை போக்கவும், உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கவும் குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை கயிறு மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

News February 18, 2026

சென்னை: குடிநீர் ஏரிகளின் நிலவரம்!

image

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் இன்று (பிப்.18) நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. பூண்டி ஏரி 3,186 மி.கன அடியுடன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. செம்பரம்பாக்கத்தில் 3,022 மி.கன அடியும், புழல் ஏரியில் 2,786 மி.கன அடியும் நீர் உள்ளது. வீராணம் ஏரியில் 1,088 மி.கன அடி, சோழவரத்தில் 561 மி.கன அடி மற்றும் தேர்வாய்கண்டிகையில் 422 மி.கன அடி என மொத்தம் 11,065 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

News February 18, 2026

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

image

சென்னை மாநகராட்சியின் 2026-27 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

News February 18, 2026

JUST IN: சென்னை மேயர் பிரியா அறிவித்தார்!

image

சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(பிப்.18) நடைபெற்றது . இதில் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைத்து பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தும் வகையில், மின்ட் சாலை – வண்ணாரப்பேட்டை மெட்ரோ மற்றும் சேப்பாக்கம் – மெரினா பகுதிகளில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

News February 18, 2026

வேணுகோபாலை சந்திக்க மறுத்தாரா மு.க.ஸ்டாலின்?

image

தமிழகம் வந்த காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் வேணுகோபாலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. முகப்பேரில் நடந்த கூட்டத்தில், திமுக – காங் கூட்டணிக்கு எதிராக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாணிக்கம் தாகூர், பிரவின் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என திமுக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

News February 18, 2026

JUST IN: மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை…!

image

சென்னை மாநகராட்சியின் 2026 – 27ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேயர் பிரியா பட்ஜெட்டை இன்று(பிப்.18) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். இதில், சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு தற்காலிக தங்கும் இடம் அமைக்கப்படும், மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.

News February 18, 2026

சென்னையில் 50 விளையாட்டு திடல் அமைக்கப்படுகிறது!

image

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திடல்களில் 50 விளையாட்டு திடல்களை ரூ.20 கோடி மதிப்பில் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது/. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நவீன அறிவியல் மையம் அமைக்கவும் பொறியியல், வேதியல் மற்றும் அறிவுத்திறன் கொண்ட மையம் பள்ளிகளில் அமைக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 18, 2026

JUST IN: சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

image

சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் வருகின்ற செப்.26ஆம் தேதி வரை பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளி கல்லூரி சான்றிதழ், ஆதார் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்கள் பகுதி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயனாக அமையும்.

error: Content is protected !!