Chennai

News December 12, 2024

சென்னையில் புளூ வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவுகிறது

image

சென்னையில் புளூ வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சளியில் தொடங்கி இருமல், தொண்டை வலி என படிப்படியாக பல்வேறு சிரமங்களை இந்த வைரஸ் ஏற்படுத்தும். இந்த வைரஸ் பாதிப்பு பெரியவர்களை விட சிறு குழந்தைகளை அதிகளவில் பாதித்துள்ளது. எனவே, பாதிக்கப்படும் குழந்தைகளை தனிமைப்படுத்த வேண்டும். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News December 12, 2024

வடகிழக்கு பருவமழை சிறப்பு முகாம்

image

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், வடகிழக்கு பருவமழைக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற உள்ளது. அதன்படி ,மீனாம்பேடு, சோளிங்கநல்லூர், மடிப்பாக்கம், உள்ளகரம், பாலவாக்கம், வேளச்சேரி, தரமணி, கோட்டூர், ராமாபுரம், நெற்குன்றம், சின்னபோரூர், எம்.ஜி.ஆர்., நகர், சாஸ்திரி நகர், எர்ணாவூர் போன்ற இடங்களில் வடகிழக்கு பருவமழையில் பாதுகாப்பாக இருப்பதற்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்கள்

News December 12, 2024

வெள்ள அபாய எச்சரிக்கை

image

பூண்டி ஏரியில் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலையாற்றின் கரையோரமாக இருக்கும் நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ராம்பாக்கம், ஒதப்பை, எறையூர், தாமரைப்பக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், சீமாவரம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், எண்ணூர், சடையன்குப்பம் ஆகிய பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் பண்ணுங்க

News December 12, 2024

சென்னையில் கனமழை தொடரும்

image

வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். நேற்று பெய்த கனமழை மீண்டும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News December 12, 2024

சென்னை ஐஐடியில் வேலை வாய்ப்பு

image

சென்னை ஐஐடியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc /M.Sc /ME / M.Tech தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.21,500 முதல் 70,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News December 12, 2024

சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை அளித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 11, 2024

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 11, 2024

சென்னையில் உயரும் வீட்டு வாடகை: ஆய்வில் தகவல்

image

இந்தியாவின் 13 முக்கிய நகரங்களில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், வீட்டு வாடகைகளின் நிலவரம் குறித்து மேஜிக் பிரிக்ஸ் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, சராசரியாக அனைத்து நகரங்களிலும் 7.4% வீட்டு வாடகை உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் வீட்டு வாடகை சராசரியாக 22.2% உயர்ந்துள்ளது. அதேபோல், டெல்லியில் 11.4%, தானே 10.9%, நவி மும்பையில் 9.9% வீட்டு வாடகை உயர்ந்துள்ளது.

News December 11, 2024

குழந்தைகள் நல மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுங்கள்

image

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையின் பல இடங்களில் தினந்தோறும் பாலி கிளினிக் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்கி இரவு 8:30 மணி வரை தொடர்ந்து இந்த முகாமானது பல இடங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை மருத்துவரிடம் தெரிவித்து பயன் அடையுங்கள். நடைபெறும் இடங்கள் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

News December 11, 2024

சென்னையில் மழை

image

சென்னையில் தற்போது பலத்த காற்றுடன் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், சென்ட்ரல், எழும்பூர், அம்பத்தூர், திருவேற்காடு, பூந்தமல்லி, வானகரம், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, பெரம்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, தேனாம்பேட்டை, அண்ணா நகர், மதுரவாயல், MRC நகர், மந்தைவெளி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்று வீசி வருவதோடு, சாரல் மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில் மழையா?

error: Content is protected !!