India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

சென்னையில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <

சென்னை பெருநகரக் காவல்துறை – சைபர் க்ரைம் பிரிவு மற்றும் தனியார் கல்லூரி இணைந்து, சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பிரம்மாண்ட ‘சைபர் ஹேக்கத்தான்’ (Cyber Hackathon) போட்டியை நடத்துகின்றன. டிஜிட்டல் சமூகத்தைப் பாதுகாப்பதற்கான புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டறிய ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <

சென்னை தண்டையார்பேட்டையில் 10வயது சிறுமி, துர்கா வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார். அப்போது மின்விசிறியில் கட்டப்பட்டிருந்த புடவை ஊஞ்சலில் விளையாடியபோது, எதிர்பாரத விதமாக புடவை கழுத்தை இறுக்கியதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். வெளியில் சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, சிறுமி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்துகின்றார்.

கும்மிடிப்பூண்டி போலீசார் 3 நாட்களுக்கு முன், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நான்சொஜோய சின்(42) என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மறுநாளில் இருந்து, அவர் கழுத்தில் 6 சவரன் செயின் அணிந்தபடி வலம் வந்துள்ளார். இதையறிந்த சிறை காவலர்கள் செயினை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், ஆசன வாயில் செயினை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நாளை மறுநாள் (பிப். 21) சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மூத்த நிர்வாகிகள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோவுக்கு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் நிதியுதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை ஏர்போர்ட் – கிளாம்பாக்கம் வரையிலும், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வழியாக ஆவடி வரையிலான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.