Chennai

News February 22, 2026

புரசைவாக்கம்: கொலை வழக்கில் ஒருவர் கைது

image

சென்னை புரசைவாக்கம் அரசப்பா தெருவில் வசித்த பாலகிருஷ்ணன் (61), அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு இருந்தார். மேலும், வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டன. புகாரின் பேரில் G-1 வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி, துணிக்கடையில் பணிபுரிந்த பீகாரைச் சேர்ந்த ஷியாம் மாத்தோவ் (35) என்பவரை இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள் மீட்கப்பட்டன.

News February 22, 2026

புரசைவாக்கம்: கொலை வழக்கில் ஒருவர் கைது

image

சென்னை புரசைவாக்கம் அரசப்பா தெருவில் வசித்த பாலகிருஷ்ணன் (61), அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு இருந்தார். மேலும், வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டன. புகாரின் பேரில் G-1 வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி, துணிக்கடையில் பணிபுரிந்த பீகாரைச் சேர்ந்த ஷியாம் மாத்தோவ் (35) என்பவரை இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள் மீட்கப்பட்டன.

News February 21, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 21, 2026

FLASH: சென்னை: நா.த.க வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்

image

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (பிப்.21) திருச்சியில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீமான், சென்னையில் உள்ள தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்து, அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கொளத்தூர் தொகுதியில் சௌந்தரபாண்டியன் லூதர் சேத் என்பவரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ஆயிஷா பேகம் என்பவரும், ராயபுரத்தில் பாபு மைலன் என்பவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News February 21, 2026

சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சென்னை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 21, 2026

சென்னை: லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை புறநகர் ரயில் சேவைகளில் சில மாற்றங்களை செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை முதல் தாம்பரம்-செங்கை செல்லும் புறநகர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த தற்காலிக புதிய அட்டவணை ஏப்ரல்.5ம் தேதி வரை பின்பற்றப்படும். இதை மற்றவர்களுக்கும் மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 21, 2026

சென்னை: லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

சென்னை மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-22321045 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 21, 2026

புறநகர் ரயில் சேவையில் குளறுபடி இல்லை என விளக்கம்

image

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் குளறுபடி ஏதும் இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ரயில் சேவையில் குளறுபடி, பாதுகாப்பற்ற ரயில் இயக்கம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. நன்கு திட்டமிடப்பட்டு, உரிய கண்காணிப்புடன் எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

News February 21, 2026

FLASH: சென்னையில் 24 வருஷத்துக்கு பிறகு நடக்கும் சம்பவம்!

image

பிப்ரவரி மாதத்தில் பெய்யும் மழை என்பது, பருவம் தவறிய மழையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்திருக்கிறார். அப்படி மழை பெய்தால் 24 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சம்பவமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.காலை முதல் சென்னையில் மேகம் மூட்டத்துடன் காணப்படுவது குறிபிடத்தக்கது.

News February 21, 2026

சென்னையில் இளையராஜா சிம்பொனி நிகழ்ச்சி

image

வருகிற மே மாதம் 30ம் தேதி சென்னையில் பிரமாண்டமான சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். “FROM RAJA WITH LOVE” என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு இசைக்கலைஞர்கள் பங்கேற்று நேரலையாக இசைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!