Chennai

News February 22, 2026

சென்னையில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) சென்னை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். ஷேர்!

News February 22, 2026

சென்னையில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) சென்னை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். ஷேர்!

News February 22, 2026

சென்னை: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

image

சென்னை மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 22, 2026

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 22, 2026

BREAKING: விஜய் பெரம்பூரில் போட்டி?

image

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என பெரம்பூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்துள்ளார். மேலும், தான் முன்மொழிந்த தீர்மானத்தை ஆனந்த் வழிமொழிவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வளர்ச்சி இல்லாத, வறுமை மிகுந்த தொகுதியில் தான் போட்டியிடுவேன் என விஜய் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன மக்களே? கமெண்ட்ல சொல்லுங்க.

News February 22, 2026

உங்கள் பகுதியில் மின் திருட்டா? உடனே புகார் அளியுங்கள்!

image

சென்னை மின் பகிர்மான வட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கண்டறியப்பட்ட 11 மின் திருட்டு வழக்குகளுக்காக ரூ.9,13,593 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மின் திருட்டு குறித்துப் பொதுமக்கள் 9445857591 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மின் திருட்டு என்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என எச்சரித்துள்ளது.

News February 22, 2026

மின்சார ரயில் சேவைகள் மூன்றாவது நாளாக பாதிப்பு

image

எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை–தாம்பரம் மின்சார ரயில் சேவை மூன்றாவது நாளாகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 204 முறை இயக்கப்படும் ரயில்கள் தற்போது 164 முறை மட்டுமே இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ரயிலும் 5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதுடன் சில இடங்களில் சிக்னல் கோளாறும் ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடியும் வரை தாமதமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 22, 2026

சென்னை அரசு நிறுவன எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

சென்னை தலைமை அஞ்சலகம்-044-28542947, பொது அஞ்சலகம் – 044-28542947, அரசு பொது மருத்துவமனை-044-25305000, மல்டி ஷ்பெஷாசிலிட்டி ஹாஸ்பிட்டல்-044-25666000, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்- 044-25281347, ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, IOB-28524171, இந்தியன் வங்கி-25233231, கனரா வங்கி-24346038, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 22, 2026

மெரினா கடற்கரையில் மாபெரும் கலைவிழா

image

சென்னை மெரினா கடற்கரை பகுதியில், விவேகானந்தர் இல்லம் எதிரில், 22.02.2026 இன்று மாலை 7.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை மாபெரும் கலைவிழா நடைபெற உள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை மற்றும் நடன நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடும்பத்துடன் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை கண்டுகளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News February 22, 2026

சென்னை: தூக்கில் தொங்கிய ஆண் சடலம்

image

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(45). நிலத்தரகரான இவர் நேற்று கோயம்பேட்டில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் விடுதி ஊழியர்கள் நீண்ட நேரம் கதவு திறக்காததால், சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே திறந்து பார்த்த போது, சரவணன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!