Chennai

News December 17, 2024

மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பதிவில் சிக்கல் 

image

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணம் செய்யும் பயணிகள் இன்று, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல் காரணமாக, மெட்ரோ ரயில் நிலைய கவுண்டர்களில் பயணிகள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. சரிசெய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

News December 17, 2024

சென்னையில் உணவுத்திருவிழா ஏற்பாடு பணிகள் தொடக்கம்

image

மெரினா சர்வீஸ் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் முதல் நம்ம சென்னை வரை டிசம்பர் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சி சார்பாக உணவுத்திருவிழா நடைபெற உள்ளது. இது தொடர்பாக சர்வீஸ் சாலையில் பிரமாண்டமான வகையில் கடைகள் அமைப்பதற்காக பெரிய டென்ட் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சியினர் தொடங்கி உள்ளனர்.

News December 17, 2024

நக்கீரன் கோபாலுக்கு பிடிவாரண்ட் உத்தரவு

image

நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா தொடர்பான செய்திகளை நக்கீரனில் வெளியிட்டபோது, கோடிக்கணக்கான பணம் கேட்டு மிரட்டியதாக நக்கீரன் கோபால் உள்ளிட்ட 8 பேர்கள் மீது சிபிசிஐடி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் சுல்தான் அர்பின், இந்த வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நக்கீரன் கோபாலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

News December 16, 2024

கண்ணாடியை உடைத்து காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு

image

டிசம்பர் 14ஆம் தேதி மதுரவாயலில் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட காருக்குள் சிக்கிய ஒருவரை, காவல்துறயினர் பத்திரமாக மீட்டனர். கனமழைக்கு மத்தியில், காரின்  கண்ணாடியை உடைத்து காப்பாற்றிய காவல்துறையினரின் துணிச்சல் பாராட்டுக்குரியது. அவர்களை, கூடுதல் காவல் ஆணையாளர் க.ச.நரேந்திரன் நாயர், நேரில் அழைத்து பாராட்டினார்.

News December 16, 2024

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஒப்புதல்

image

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை அமைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்த உடனடி, நீண்டகால திட்டம் தயாரித்தல், பன்னாட்டு நிதியைக் கொண்டு வருவதற்கான மாதிரிகளை உருவாக்குவது ஆணையத்தின் பணியாகும்.

News December 16, 2024

மெத்தாம்பெட்டமைன் கடத்திய 2 பேர் கைது

image

சென்னை எழும்பூரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சொகுசு காரை சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பி ஓடிய நிலையில், காரில் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான 705 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக அசாமைச் சேர்ந்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். 

News December 16, 2024

தடா நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் குறைகிறது

image

சென்னை- தடா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் 15% வரை குறைகிறது. சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் முக்கிய சாலையாக 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்னை – தடா தேசிய நெடுஞ்சாலை உள்ளது.இந்த நிலையில், சுங்க கட்டணம் ரூ.265ல் இருந்து ரூ.220 ஆக குறைக்கபடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News December 16, 2024

குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா

image

உலக சாம்பியன் குக்கேஷுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மாலை நடைபெறும் இந்த பாராட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

News December 16, 2024

முதல் நீரிழிவு உயிரி வங்கி சென்னையில் அமைப்பு

image

ICMR மற்றும் MDRF சார்பில், இந்தியாவின் முதல் நீரிழிவு உயிரி வங்கி சென்னை MDRF வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. நீரிழிவு நோய்க்கான காரணங்கள், இந்திய வகை நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்புடைய கோளாறுகள் பற்றிய மேம்பட்ட ஆராய்ச்சியை நோக்கமாக கொண்டு இவ்வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. உயிர் மாதிரிகளை சேகரித்தல், பதப்படுத்துதல், சேமித்தல், விநியோகித்தல் உள்ளிட்ட ஆய்வுகளுக்கு இவ்வங்கி உதவும்.

News December 16, 2024

சென்னையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு 

image

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் இன்று (டிச.16) நள்ளிரவில் மழை பெய்யத் தொடங்கி அதிகாலையில் தீவிரம் அடையத் தொடங்கும் என்றும், அதன் தொடர்ச்சியாக நாளை அதிகாலையில் சென்னையில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!