Chennai

News December 18, 2024

ஐயப்ப பக்தர்கள் வாகனம் விபத்து: 20+ பேர் படுகாயம்

image

திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியில் இருந்து சபரிமலை நோக்கிச் சென்ற 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

News December 18, 2024

சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிச.17) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதையடுத்து, சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News December 18, 2024

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 17, 2024

பைக் டாக்சி அசோசியன் சார்பில் புகார்

image

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பைக் டாக்ஸி சேவை இந்தியா முழுவதும் இயங்கி வருவதால் தமிழகத்திலும் உரிய ஆவணங்களுடன் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் தொடர்ந்து பணிபுரிய எந்த தடையும் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், எங்களை பணிபுரிய விடாமல் சட்டத்துக்குப் புறம்பாக தொடர்ந்து சில ஆட்டோ ஓட்டுநர்கள் அச்சுறுத்தி வருகின்றனர் என்று பைக் டாக்சி அசோசியன் சார்பில் காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News December 17, 2024

டாக்டரை கத்தியால் குத்தியவருக்கு நிபந்தனை ஜாமீன் 

image

கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில், கடந்த 2 மாதங்களுக்கு முன், டாக்டர் பாலாஜியை, திருவான்மியூரைச் சேர்ந்த விக்னேஷ், கத்தியால் குத்தி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

News December 17, 2024

போலியான வேலை வாய்ப்புகாளால் ஏமாற வேண்டாம்

image

“சென்னை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா” போலியான வேலை வாய்ப்புகள் பற்றி தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. ” சமூக ஊடகங்களில் பரவும் போலியான வேலை வாய்ப்புகளில் விழுவதைத் தவிர்க்கவும் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் செயல்படும் முன் எப்போதும் சரிபார்க்கவும்! அனைத்து #AAI காலியிடங்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 17, 2024

சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சீரானது

image

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பெறுவதில் இன்று சிக்கல் ஏற்பட்டது. சர்வர் கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது. அதுவரை கவுண்டர்களில் டிக்கெட் பெற்று பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இணையதளம் சரிசெய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆன்லைனில் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 17, 2024

சென்னையில் 11 பேர் கைது 

image

சென்னை போலீசாரால் இன்று பல்வேறு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.அதன்படி, ஓட்டேரி போலீசார், பெண்ணிடம் தகராறு செய்து, தாக்கிய ஒருவர், ராஜமங்கலம் போலீசார்,தனியார் உணவு டெலிவரி செய்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய 2 பேர், ராயப்பேட்டை மருத்துவமனையில் நோயாளியிடம் செல்போன் திருடிய ஒருவர்,எம்ஜிஆர் நகரில்,தனியார் பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்திய 5 பேர்,கஞ்சா கடத்தி வந்த 2 பேர் உட்பட 11 பேர் கைது.

News December 17, 2024

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க

News December 17, 2024

மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பதிவில் சிக்கல் 

image

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணம் செய்யும் பயணிகள் இன்று, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல் காரணமாக, மெட்ரோ ரயில் நிலைய கவுண்டர்களில் பயணிகள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. சரிசெய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!