India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேயர் பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயானபூமிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் ஜெய சந்திர பானு ரெட்டி, துணை ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சத்யம் திரையரங்கில் தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் 22ஆவது சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது. திரைப்படத்துறை ஆளுமைகளின் கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள், கலந்துரையாடல் உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டன.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, மயிலாப்பூரில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் பின் பேசிய எம்.எல்.ஏ. மயிலை வேலு, “அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலனுக்காக பாடுபடுபவர் எண்ணம் எப்படி இருக்கும் என்று தமிழக முதல்வர் தெளிவுபடுத்திவிட்டார். அமித்ஷா அந்த சொல்லை வாபஸ் பெற வேண்டும். மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, எழும்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், மாணவ, மாணவிகள், பணிக்கு செலவோ செல்வோர் சிரமம் அடைகின்றனர். உங்க ஏரியாவில் மழையா?
வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக சென்னையில் நேற்று (டிச.18) காலை முதல் மழை பெய்தது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் – 38.4 மி.மீ., நந்தனம் – 31 மி.மீ., கிண்டி – 28 மி.மீ., மீனம்பாக்கம் – 26.7 மி.மீ., தரமணி – 26 மி.மீ., பள்ளிக்கரணை – 21 மி.மீ., மழை பதிவானது. தொடா்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (டிச.19, 20) மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை, வரும் 20ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவில் பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இலவசம்.
6ஆவது உலக கேரம் போட்டிகளில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று சிறப்பு சேர்த்த கேரம் சாம்பியன்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசுத்தொகை வழங்கினார். எம்.காசிமாவுக்கு ரூ.1 கோடி, வி.மித்ரா மற்றும் கே.நாகஜோதிக்கு தலா ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. மேலும், தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் அரசு துணை நிற்கும் என்று வாழ்த்தினார்.
எழும்பூரில் 700 கிராம் மெத் போதைப்பொருள் விற்பனை செய்த விவகாரத்தில் அருண்பாண்டியன் என்ற காவலர் கைது. நேற்று முன்தினம் பாலசுப்பிரமணி, பாத்திமா என்று இரண்டு நபர்களை எழும்பூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 700 கிராம் மெத் போதை பொருள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் பழைய வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் நீதிமன்ற காவலராக பணியாற்றி வரும் அருண் பாண்டியனை இன்று கைது செய்துள்ளனர்.
ஓமந்தூரார் மருத்துவமனை அருகே ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 நபர்கள் என மொத்தம் நான்கு நபர்கள் கைது. திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமானவரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 நபர்கள் கைது. 4 நபர்களிடமும் திருவல்லிக்கேணி காவல்துறை ஆணையர் சந்தோஷ் ஹிதிமானி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, அடையாறு, சென்ட்ரல், எழும்பூர், ராயபுரம், திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், வடபழனி, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு, அயனாவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழை?
Sorry, no posts matched your criteria.