India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது. திரையரங்க கட்டிடம் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்பு வரவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உதயம் திரையரங்குகள் செயல்படாதது, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பெரும் சோகத்தை உருவாக்கி இருக்கிறது. 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரையரங்கம், சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்று.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிச.31 மாலை முதல் ஜன.1ஆம் தேதி வரை பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவலர்கள், குதிரைப்படைகள் மற்றும் ATV வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே, குடித்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்.
சென்னையில் இன்று (டிச.28) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைகழக வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்விக் கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட மாணவி தொடர்ந்து படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு போலீசார் பல்வேறு கட்டுப்பாடு விதித்துள்ளனர். மாமல்லபுரம், முட்டுக்காடு, திருவிடந்தை, பூஞ்சேரி, கோவளம், வெங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்கானிக்க உள்ளனர். பார் லைசென்ஸ் வைத்திருப்போர் தடை செய்யப்பட்ட வெளிமாநில, வெளிநாட்டு மதுபானங்களை விற்க கூடாது. தடை செய்யபட்ட போதை பொருட்கள் வழங்ககூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் அபிஷேக் என்பவர், நூலில் கேப்டன் விஜயகாந்தின் முகத்தை வெள்ளை துணியில் வரைந்து அசத்தி உள்ளார். 250 ஆணி, 4 கிலோ மீட்டர் நூல் கொண்டு சுமார் 3 வாரமாக, மாணவன் கேப்டன் புகைப்படத்தை வரைந்து காட்டியுள்ளார். இந்த படத்தை, மதுரவாயலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்துள்ளான். மாணவனின் இந்த அசாத்திய திறனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு தொண்டர்கள் காலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர். மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், காவல்துறையினர் பேரணி செல்ல அனுமதி மறுத்துள்ளனர். இதனால் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விஜயகாந்த் நினைவுதினத்தை முன்னிட்டு நடத்தப்படும் பேரணிக்கு அனுமதி மறுப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? அல்லது காவல்துறையின் காழ்ப்புணர்ச்சியா? என்று தெரியவில்லை என தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி பேட்டியளித்துள்ளார். மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பேரணி நடத்த அனுமதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.28) அனுசரிக்கப்படுகிறது. இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் (கேப்டன் ஆலயம்) தேமுதிக தொண்டர்கள் காலை முதல் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேடு நினைவிடத்தில் காலை 9.30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது என கட்சி தலைமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு (ஜன.2ஆம் தேதி வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.