India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அங்கு வெற்றி பெற சில வியூகங்களை வகுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. வடசென்னை மக்களின் ஓட்டுக்களை பெற மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் கூட்டணி பேச்சு வார்த்தை நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. புதிய கட்சியை தொடங்கியுள்ள அவர் இதுவரை கூட்டணி குறித்து எந்த பதிலும் சொல்லவில்லையாம்.

கொருக்குப்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் இம்தியாஸ்(18). கல்லூரி மாணவரான இவர், நேற்று மாலை தன் சுசூகி பைக்கில் தாம்பரம் – புழல் பைபாஸ் சாலையில், கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே புழல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே திசையில் பின்னால் வந்த லாரி, இம்தியாஸ் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் ஒட ஒட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று ரவுடி முனீஸை அரிவாளுடன் பின் தொடர்ந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த ரவுடி சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இவர் மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

சென்னை கமிஷனர் அருண், உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) கே.ஜோஷி நிர்மல் குமார், நேற்று வேப்பேரி காவல் ஆணையரகத்தில் பணி நிறைவு விழா நடைபெற்றது. இதில், சென்னை பெருநகர காவலில் 26 முதல் 40 ஆண்டுகள் வரை சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் 22 காவல் துறையினரை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து சான்றிதழ்கள் வழங்கினர்.

சென்னை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2.அல்லது<
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.85,000 முதல் ரூ.1,45,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். மேலும் பதவிக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் வரும் மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறக்காம ஷேர் பண்ணுங்க

சென்னை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க

சென்னையில் இன்று (பிப்-27) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார். அவருடன் ஆவரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அவரது மகன் ops ரவீந்திரன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் திமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். சில தினங்களுக்கு முன்பே சட்டசபையில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர் முதல்வரை புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பல்வேறு தோ்வுகளுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை இன்று (பிப்.27) வெளியிடப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவாளா் ரீட்டா ஜான் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் இளநிலை, முதுநிலை, தொழில்முறை பட்டப்படிப்பு, உருது (ஓடி) உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான தோ்வுகள் நடைபெற்றன. இதன் முடிவு மாலையில் இணையதளத்தில் வெளியிடுகின்றன.
Sorry, no posts matched your criteria.