Chennai

News March 1, 2026

சென்னையில் ஹேட்ரிக் சாதனை!

image

2011-ல் இத்தொகுதி உருவாக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி, இன்றுவரை இது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கோட்டையாகவே இருந்து வருகிறது. 2011, 2016, 2021 என 3 முறையும் மு.க. ஸ்டாலின் இங்கேயே போட்டியிட்டு வென்றுள்ளார். கடந்த 2021 தேர்தலில் ஸ்டாலின் சுமார் 60.86% வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளரை விட 70,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு 2.12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

News March 1, 2026

சென்னை: மனைவியை பிளேடால் கிழித்த கணவன்

image

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரம்யா (25). இவரது கணவர் தினேஷ். கடந்த ஜனவரி மாதம் சதாம் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் புழல் சிறையில் தினேஷ் அடைக்கப்பட்டார். ரம்யா தனது கணவரை ஜாமீனில் வெளியே கொண்டுவந்தார். நேற்று காலை சிறையில் இருந்து வந்த அவர், திடீரென பிளேடால் சரமாரியாக ரம்யா கிழித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தினேஷை நேற்று மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 1, 2026

சென்னை: பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்

image

புளியந்தோப்பை சேர்ந்த 25 வயது பெண். இவருக்கும் பிரதீபன்(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்த பிரதீபன், அவரை மிரட்டி, 40,000 ரூபாய் கேட்டுள்ளார். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பெண், புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார், பிரதீபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 1, 2026

மும்பை வரை சென்று தட்டித் தூக்கிய சென்னை போலீஸ்!

image

எம்.கே.பி. நகர் போலீசார் கடந்த டிசம்பர் 15-ம் தேதி வியாசர்பாடி, பி.வி.காலனி, நேதாஜி மைதானம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, 500 உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த அப்பகுதியை சேர்ந்த சரத்குமார் (29) என்பவரை கைது செய்தனர். மேலும், இவருக்கு மாத்திரைகள் விற்பனை செய்த மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜாவேணு நாயக்கர் (46) என்பவரை மும்பையில் கைது செய்து, இன்று சென்னை அழைத்து வந்தனர்.

News February 28, 2026

சென்னை: குடும்பத்தில் பிரச்னையா?

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, சென்னை பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8610999482, 9500190590 என்ற எண்களில் புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 28, 2026

சென்னை: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

சென்னை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது <>இந்த இணையதளத்தில் <<>>உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

சென்னை: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம் – இது போதும்!

image

சென்னை மக்களே, உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்க போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News February 28, 2026

சென்னையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News February 28, 2026

பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோவுக்கு அனுமதி

image

சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரியின் 4 நாட்கள் ஆய்வை தொடர்ந்து மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி -வடபழனி வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News February 28, 2026

பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்

image

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில், நாளை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு சென்னை வருகிறார். இரவு 8.40 மணிக்கு வரும் அவர், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இரவு தங்குகிறார். அங்கு பிரதமர் மோடியை பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளனர்.

error: Content is protected !!