Chennai

News March 2, 2026

சென்னையில் கொடூரத்தின் உச்சம்

image

அயனாவரத்தைச் சேர்ந்த 7வயது சிறுமி கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது விஜய்(35) என்பவர் வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை தன் வீட்டிற்குள் அடைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு துன்புறுத்தியுள்ளார். சிறுமி அலறலை கேட்டு வந்த அவரது தாய், மகளை மீட்டு, சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அயனாவரம் மகளிர் போலீசார் விசாரித்து, விஜயை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News March 2, 2026

சென்னை: மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி!

image

கொத்தவால்சாவடியை சேர்ந்தவர் முத்துகுமார் (57). இவரது வீட்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோமின், சூரஜ், ரியாஸ்கான் உள்ளிட்டோர் பணி செய்து வந்தனர். நேற்று, கூரை அமைப்பதற்காக, இரும்பு சீட்டை எடுத்து வந்த போது மின்மாற்றியில் உரசியதில், மோமின் உட்பட மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், மோமின் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 1, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச். 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

சென்னை: உங்க ஆபீஸில் பிரச்னையா?

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். உங்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

சென்னை: அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <>இந்த இணையதளங்களில் <<>>விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

சென்னை: குடிநீர் புகார்களுக்கு இனி ஈஸி தீர்வு!

image

சென்னையில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய “சென்னை குடிநீர்” மொபைல் செயலியை பயன்படுத்துமாறு சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்தச் செயலி மூலம் புகார்களை அளித்தால், மிக விரைவாகத் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளது. இந்தச் செயலியில் புகார்களைப் புகைப்படத்துடன் பதிவேற்றும் வசதி உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News March 1, 2026

சென்னை மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

image

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

சென்னை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

சென்னை மக்களே, கேஸ் புக்கிங்கில் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC & OTP கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ் : https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in, ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

சென்னையில் விளம்பர பலகை

image

சென்னையில் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், உரிமத்துக்கான விண்ணப்பம் அளிக்கவும், ஏற்கெனவே அமைத்த விளம்பரங்களுக்கு உரிமம் பெற விதிமீறல்களைச் சரிப்படுத்தவும் வரும் மார்ச் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

News March 1, 2026

சென்னை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!