India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனது வீட்டில் இருந்த பொருட்களை வீட்டின் உரிமையாளர் திருடியுள்ளதாக நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக, தான் வசிக்கும் வாடகை வீட்டின் கதவை போலீசார் மற்றும் செய்தியாளர்கள் முன்பு கஞ்சா கருப்பு திறந்து ஆய்வு செய்தார். அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதையை முதல்வர் ஸ்டாலின் கைகளால் வாங்கிய கலை மாமணி விருதை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டு வைத்தார்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது.மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் இருந்த கலைமாமணி விருதை காணவில்லை எனவும், வீட்டில் இருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கப்பணத்தையும் காணவில்லை எனவும் நடிகர் கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார். வீட்டிற்கு வாடகை கொடுக்காமல் கஞ்சா கருப்பு மிரட்டுவதாக உரிமையாளர் புகார் தெரிவித்த நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள் காணவில்லை என கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார்.
இந்தியா– இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதனால், இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் , இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு பணிக்காக 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நேரில் வரமுடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
சென்னையில் உள்ள (200 வார்டுகளிலும்) அனைத்து வார்டுகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, நடப்பாண்டிற்கான செயல் திட்டங்கள், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாற்றுத்திறனாளிகளின் நலன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் தீர்மானங்களும் நிறைவேற்றலாம். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருப்பதால், டி 20 கிரிக்கெட் போட்டிக்கு செல்வோர் நாளை மின்சார ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயிலில் இலவசமாக பயணம் மேற்கொள்ள கிரிக்கெட் டிக்கெட் வைத்திருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை இந்தியா – இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ள நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மதியம் 2 மணி முதல், இரவு 11 மணி வரை சேப்பாக்கம் சுற்றிய பகுதிகளான விக்டோரியா ஹாஸ்டல், பெல்ஸ் சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் என்பதால் சென்னையில் பல்வேறு இடங்களில் “சென்னை பொண்ணுக்கு காதலிக்க மதுரை பையன் தேவை” என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. “அப்ளை செய்தால் ஆஹான்னு ஆச்சரியப்படுத்துகிற பரிசு காத்திருக்கிறது” என்ற வாசகங்களும் அதில் இடம் பெற்றுள்ளது. சர்ச்சைக்குரிய வகையிலான இந்த போஸ்டரை ஓட்டியது யார்? என்ன நோக்கத்திற்காக ஒட்டப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் – குமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. எழும்பூரில் இருந்து இன்று (ஜன.24) இரவு 10:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு குமரி சென்றடையும். மறுமார்க்கமாக, குமரியில் இருந்து 26ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை (ஜன.27) 8:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சற்று நேரத்திலேயே முடிந்து விட்டது.
Sorry, no posts matched your criteria.