Chennai

News March 17, 2026

சென்னையில் வரி வசூலில் இலக்கை நெருங்கும் மாநகராட்சி

image

சென்னையில் 2025-26 நிதியாண்டு முடிவடைய உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி வரி வசூலில் இலக்கை நெருங்கியுள்ளது. இதுவரை ரூ.1,881 கோடி சொத்து மற்றும் தொழில் வரிகள் வசூலிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான சொத்து வரி இலக்கு ரூ.2,020 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை எட்டுவோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 17, 2026

JUST IN: சென்னை GH-ல் ஓட்டல் மூடல்!

image

தமிழ்நாட்டில் வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஓட்டல்களில் விறகு மற்றும் மின் அடுப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள ஓட்டல்கள் மூடப்படுகின்றன. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சாலையைக் கடந்து சென்று உணவு வாங்கச் சென்றாலும், பல கடைகள் மூடப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

News March 17, 2026

சென்னையில் குறைதீர் முகாம்கள் ஒத்தி வைப்பு!

image

சென்னையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அனைத்து குறைதீர் முகாம்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பொதுமக்கள் தங்கள் மனுக்களை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், தரைத்தளத்தில் உள்ள தபால் பெட்டியில் போடலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சென்னை: தேர்தல் தணிக்கையில் ரூ.3 லட்சம் பறிமுதல்!

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆவணங்கள் இன்றி ரூ.50,000 மேல் ரொக்கம் எடுத்துச் செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று(16.03.26) நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகன சோதனையில், சேப்பாக்கம் தொகுதியில் ரூ.1,29,000, வில்லிவாக்கம் தொகுதியில் ரூ.1,16,000, எழும்பூர் தொகுதியில் ரூ.55,000 என மொத்தம் ரூ.3,00,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.

News March 17, 2026

சென்னை: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

சென்னை பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து மார்ச்.23க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

சென்னையில் போட்டியிடுகிறாரா விஜய்?

image

சட்டசபை தேர்தலை சந்திக்க தவெக தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், விஜய் போட்டியிடுவதாகக் கருதப்படும் பெரம்பூர் தொகுதியில் தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணியை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்துள்ளார். அம்பத்தூர், தி.நகர், வில்லிவாக்கம் பகுதிகளிலும் தேர்தல் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று(மார்ச் 16) மாலை நிர்வாகிகளுடன் தேனாம்பேட்டையில் விஜய் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2026

சென்னை: போக்சோவில் போலீஸ்காரருக்கு இரட்டை ஆயுள்!

image

ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் மகேஷ்(27) புழல் சிறையில் போலீஸாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு, இவருக்கு முகநூல் மூலமாக 16 வயது சிறுமி பழக்கமானார். அச்சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு வைத்த மகேஷ், திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால், அச்சிறுமி தீக்குளித்து உயிரிழந்தார். இந்த வழக்கில் மகேஷுக்கு இரட்டை ஆயுள், ரூ.1,10,000 அபராதம் விதித்து நேற்று(மார்ச் 16) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

error: Content is protected !!