Chennai

News March 19, 2026

சென்னை: டிகிரி முடித்தால் ரூ.50,000! இன்றே கடைசி

image

சென்னை மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 19) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>> செய்து விண்ணப்பியுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

News March 19, 2026

சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர் உயிரிழப்பு!

image

சென்னை, பார்க் ரயில் நிலையத்தில் மே 17 இயக்கத்தின் சார்பில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவகுமார், பலத்த காயமடைந்து, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிவா என்கிற சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

News March 19, 2026

சென்னையில் கூட்டு பாலியல் வன்கொடுமை

image

பீஹாரைச் சேர்ந்த 16 வயது சிறுமி, ECRல் உள்ள ஒரு ரப்பர் தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு பணிபுரியும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபன்(19) என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு முன்பு கொட்டிவக்கத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று நண்பர்களுடன் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில் ரூபனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News March 18, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.18) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 18, 2026

சென்னையின் ஸ்பெஷல் உணவுகள் எங்கே கிடைக்கும் தெரியுமா?

image

✅ மைலாப்பூர் பில்டர் காபி ✅ மெரினா பீச் சுண்டல் ✅ பர்மா பஜார் அத்தோ & மோய்கோ ✅சௌகார்பேட்டை முறுக்கு சீஸ் சான்விச் ✅ வியாசர்பாடி மோலேசா ✅ மண்ணடி நோம்பு கஞ்சி & மட்டன் சமோசா ✅ சௌகார்பேட்டை லஸ்ஸி ✅ காசிமேடு கடல் உணவு ✅ ரிச்சி ஸ்ட்ரீட் குலாப்ஜாமூன், ரசகுல்லா, ஜிலேபி, பால்கோவா ✅ பெசன்ட் நகர் மீன் பஜ்ஜி, இறால் பஜ்ஜி. உங்க நண்பர்களோட இங்கெல்லாம் போய் என்ஜாய் பண்ணுங்க. அவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 18, 2026

சென்னை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

சென்னை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 18, 2026

சென்னை: தேர்தல் வந்தாச்சு – CHECK பண்ணுங்க!

image

சென்னை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 18, 2026

சென்னை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 18, 2026

சென்னையில் வாக்காளர்கள் குழப்பம்

image

அடையாறு: வேளச்சேரி தொகுதியில் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில், வாக்காளர் பெயர்கள், ஹிந்தி, பெங்காலி, ஒடியா மொழிகளில் இருப்பதால், ஓட்டு பதிவின் போது சிக்கல் ஏற்படும் என அலுவலர்கள், கட்சி முகவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள், ஆதார் தகவல்களை அப்படியே பதிவேற்றம் செய்ததால் நடந்துள்ளது. மேலும் “சுவிதா” செயலி மூலம் இந்த பிரச்சினை சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

News March 18, 2026

சென்னையில் வீடே அதிர கேட்ட சத்தம்

image

சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டையில் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்தனர். இரவில் சிலிண்டரை சரியாக அணைக்காததால் எரிவாயு கசிந்து வீடு முழுவதும் பரவியது. அதிகாலை மின்விளக்கை ஏற்றிய போது இந்த விபத்து ஏற்பட்டது. தாய் சித்ரா மற்றும் இரு மகன்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!