Chennai

News March 17, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.17) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 17, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.17) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 17, 2026

சென்னை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 17, 2026

சென்னை: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044–25342441 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. *மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க*

News March 17, 2026

சென்னை: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

சென்னை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

image

சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணி நாளையுடன்(மார்ச் 18) நிறைவு பெறுகிறது. மைக்ரோ சிப் பொருத்தாத மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் உள்ள 22,875 மாடுகளில் 900 மாடுகளுக்கு மட்டுமே மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளன என்றும் சாலைகளில் நடமாடுவதால் மாடுகளுக்கு சிப் பொருத்துவது கட்டாயம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News March 17, 2026

சென்னை ஒன் செயலியில் புதிய மாற்றம்!

image

’சென்னை ஒன்’ செயலி​யில் உள்ள மாதாந்​திர பயண அட்​டை​யில், பயணிக்​கும் பேருந்​தின் எண்​ணைப் பதி​விடு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டிருந்​தது. ஒவ்​வொரு முறை பயணத்​தின் போதும், பேருந்​தின் எண்​ணைப் பதி​விடு​வது சிரம​மாக இருப்​ப​தாக பயணி​கள் புகார் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், இனி அந்த செயலியில் உள்ள மாதாந்​திர பேருந்து அட்​டையை நடத்​துநரிடம் காண்​பித்​தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2026

சென்னை வாசிகளுக்கு புதிய வசதி!

image

சென்னையில் மிகவும் முக்கியம் வாய்ந்த தபால்களை ஒரே நாளில் கொண்டு சேர்க்கும் விதமாக ‘24 விரைவு தபால்’ என்ற புதிய வசதி இந்திய தபால் துறையில் இன்று(மார்ச் 17) அறிமுகமாகிறது. முதற்கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்தச் சேவையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் சென்னையில் உள்ள மக்கள் தங்களின் அவசரக் கடிதங்களை 24 மணி நேரத்திற்குள் கொண்டு சேர்க்கலாம்.

News March 17, 2026

சென்னை: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

image

சென்னை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

News March 17, 2026

சென்னை வேட்பாளர்கள் செலவு நிர்ணயம்!

image

தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை மாவட்ட வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.7, 20 லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.35, வெஜிடபிள் உணவு மற்றும் வெரைட்டி ரைஸ் பாக்ஸ்: ரூ.50, நொறுக்குத்தீனி (உலர் பழம் தவிர்த்து) 100 கிராமுக்கு ரூ.50, இனிப்பு 100 கிராமுக்கு ரூ.90 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!