India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக்கு, 1,217 ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க, அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பரிந்துரை செய்துள்ளார்.
அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <
மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தில் விதிகளை மீறி மதுபானக் கடைகள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பீஹாரை சேர்ந்தவர் மனோஜ் மாலிக். கூலித்தொழிலாளியான இவர் பவுஞ்சூர் அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கமலகண்ணன் என்பவரிடம் கடந்த 10 நாட்களாக நெல் மூட்டை ஏற்றும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று நீலமங்கலத்தில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான வயலில் நெல் மூட்டையை ஏற்றுவதற்காக லாரியில் சென்றார். அப்போது வயல்வெளியில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மனோஜ் மாலிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
பிரமிக்க வைக்கும் விதத்தில் செங்கல்பட்டு அருகே திருவடி சூலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம். கோபுரம் மேலிருந்து பார்க்க ஸ்ரீசக்கரம் போல தோற்றமளிக்கின்றது. இந்த கோயிலில் ஸ்ரீ மகா பைரவர் மூலவராக அமைந்துள்ளதோடு, கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணர் சந்நிதி, ஹனுமன் சந்நிதி, ஹோம மண்டபம், பெளர்ணமி மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. கதவு இல்லா கருவறையுடன் பயம் போக்குகின்ற பைரவராக காட்சி தருகின்றார். ஷேர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6-தாலுகாக்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய, வரும் 12-ந்தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி பரனூர், பிலாப்பூர், வில்லிவாக்கம், கடம்பாடி, கேளம்பாக்கம் மற்றும் நல்லம்பாக்கம் உள்ளிட்ட தாலுக்காக்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறையில் காலியாக உள்ள சித்த மருத்துவ அலுவலர் 1, யுனானி மருத்துவ அலுவலர் 1, யோகா ஆண் 8, பெண் 8, பல்நோக்கு பணியாளர்கள் 3 ஆகிய பணியிடங்களுக்கு <
மதுராந்தகம் அருகே உள்ள அரையப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், (29). இவர் நேற்று, கீழவலம் ஏரியில் மீன் பிடித்துள்ளார். அப்போது அவருக்கு பனங்கொட்டை மீன் ஒன்று சிக்கியுள்ளது. அதை வாயில் கவ்வியபடி, மீண்டும் மீன் பிடிக்க முயன்றுள்ளார்.அப்போது, எதிர்பாராத விதமாக, வாயில் கவ்விக்கொண்டிருந்த மீன் நழுவி, அவரது தொண்டைக்குள் சென்று சிக்கியுள்ளது. இதனால், மணிகண்டன் மூச்சு விட முடியாமல் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், வரும் ஏப்.10 அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் அதனுடன் இணைந்த பார்கள், FL2 ஹோட்டல்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விற்பனை ஏதும் செய்யக்கூடாது, விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.