Chengalpattu

News April 14, 2024

அமைச்சர் அன்பரசன் தலைமையில் கூட்டம்

image

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகே காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று (ஏப்ரல்-14) நடைபெற்றது அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி, ராஜா, கருணாநிதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்,

News April 14, 2024

பாஜக பிரமுகருக்கு சம்மன்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி ஏப்.6 இல் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சதீஷ், நவீன்,பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக கோவர்தனுக்கு சொந்தமான உணவகத்தில் ரூ.1 கோடி கைமாற்றப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பாஜக தொழிற்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் நேரில் ஆஜராக தாம்பரம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளது.

News April 13, 2024

25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை

image

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட முருக்கங்காடு பகுதியில், 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித வசதிகளையும் நிறைவேற்றாமல், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கும், இடைக்கழிநாடு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து லோக்சபா தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக,அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

News April 13, 2024

கஞ்சாவுடன் சுற்றி திரிந்த இளைஞர் கைது

image

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றி திரிந்த பார்த்திபன்(26) என்பவரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

News April 12, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து 6 பேர் காயம்

image

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (ஏப்.12) சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த வேன் மீது வேகமாக வந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 5 பெண்கள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 6 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 12, 2024

செங்கல்பட்டில் வாகன ஓட்டிகள் அவதி

image

சிங்கபெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புதுார் சாலையில் தினமும் திருக்கச்சூர், ஆப்பூர், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே கேட் அடிக்கடி சிக்னல் கிடைக்காமல் பழுதடைந்து,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 12, 2024

திருப்போரூர்: ஆர்வம் காட்டும் முதியோர்

image

மக்களவை தேர்தலில் 85வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 40 சதவீதத்திற்கு உள்ள மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு அளிக்கலாம் என, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்போரூர் சட்டசபை தொகுதியில், 85 வயதுக்கு மேல் உள்ள முதியோர் 231 பேர், மாற்றுத்திறனாளிகள் 220 பேர் என, 451 பேர் உள்ளனர். அவர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி, நடைபெற்ற வருகிறது.

News April 11, 2024

கல் குவாரி லாரிகளால் ஆபத்து

image

செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான சித்தாமூர், பவுஞ்சூர், ஜமீன் எண்டத்துார் , ஓணம்பாக்கம் , நெல்வாய்பாளையம் , ஆக்கினாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு கல் குவாரிகள் செயல்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்து, லாரிகள் வாயிலாக அதிகபடியான பாரங்கள் ஏற்றிச்செல்வது , சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

News April 11, 2024

மது பாட்டில்கள் விற்பனை செய்தவருக்கு போலீசார் வலை

image

சிங்கபெருமாள் கோவில் அடுத்த கோவிந்தபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மறைமலை நகர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மது விற்பனையில் ஈடுபட்டவரை பிடிக்க முயன்ற போது தப்பியோடினார். இதையடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 43 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

News April 11, 2024

வேதகிரீஸ்வரர் கோவிலில் ரூ.15.23 லட்சம் காணிக்கை

image

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ் இயங்கி வருகிறது. நேற்று உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோவிலில் உள்ள 10 பொது உண்டியல்களில் 12 லட்சத்து 84,394 ரூபாயும், இரண்டு திருப்பணி உண்டியல்களில் 2 லட்சத்து 39,049 ரூபாயும், தங்கம் 51 கிராம், வெள்ளி 472 கிராம் காணிக்கையாக கிடைத்துள்ளது.