India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி, பிப்ரவரி 2, 2024 அன்று தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதன் 3ஆம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 2ஆம் தேதி பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டில் ஜனவரி 30 ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள், திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், சந்தேகமான செயல்களை உடனடியாக 1930 உதவி எண் அல்லது cybercrime.gov.in மூலம் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேளம்பாக்கம் அருகே கழிப்பட்டூரில் தனியார் குடியிருப்பில் வாடகைக்கு தங்கி இருப்பவர் அனுஶ்ரீ. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஸ்ரீயின், தாத்தா சேஷாவரதலு உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அனுஸ்ரீ நேற்றிரவு தந்தைக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

1.முதலில்<

செங்கை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/l<

செங்கை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <

கிளாம்பாகத்தில் இருந்து நேற்று மதியம் 30 பயணிகளுடன் விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்து செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி அருகே திடீரென பிரேக் பழுதானது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுனர் சாலையோர தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )

மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார் (ம) தினேஷ் அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவரும் வீட்டு வாசலில் காரை நிறுத்துவது தொடர்பான பார்க்கிங் பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் பிரச்சனை முற்றிய நிலையில் அண்ணன் தினேஷின் விரலை தம்பி ராஜேஷ் கடித்து துண்டாக்கி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.