Chengalpattu

News January 27, 2026

செங்கை: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News January 27, 2026

செங்கை: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

image

செங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 27, 2026

செங்கை: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 27, 2026

செங்கை: 359 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் குடியரசு தின கிராமசபை கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. சித்தாமூர் ஊராட்சியில் கலெக்டர் சினேகா பங்கேற்று, மக்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தென்மேல்பாக்கத்தில் சமுதாயக்கூடம் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிங்கபெருமாள் கோவில், பகுதிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் சாலை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

News January 27, 2026

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட
மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் குடியரசு தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் குடிநீர் மிகவும் அசுத்தமாக வருவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தினர்.

News January 27, 2026

செங்கை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377

2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639

3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093

8.ரத்த வங்கி – 1910

9.கண் வங்கி -1919

10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

News January 27, 2026

மாமல்லாபுரம்: நகராத 17 ஆண்டு கால திட்டம்

image

சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தை செங்கல்பட்டுடன் இணைக்கும் ரயில் பாதை திட்டம், 17 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ள பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள், இத்திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்துகின்றனர். கடந்த 2011-ல் கற்கள் நடப்பட்டும், நிதி ஒதுக்கீடு மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தொய்வால் பணி முடங்கியுள்ளது.

News January 27, 2026

செங்கை: கிராம ஊராட்சி செயலாளர் பலி!

image

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக அதே பகுதியை சேர்ந்த தசரதன் (35) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜன.26) தனது வயல்வெளியில் உள்ள மின் மோட்டாரில் மின் மோட்டார் இயக்க சுவிட்ச் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். மேலும், மேல்மருவத்தூர் போலீசார் இதனை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 27, 2026

செங்கை: காதலன் கண்முன்னே துடிதுடித்த பலி!

image

கள்ளக்குறிச்சி அதிமுக நிர்வாகி ராஜசேகரின் மகள் அனீஷா (25). இவர் செங்கல்பட்டு மாவட்டம் ஏகாட்டூரில் தங்கி சட்டம் படித்து வந்தார். இவர் தனது காதலன் நித்தியானந்தத்திடம் வீடியோ காலில் பேசியவாறே, தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், அனீஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 27, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு நேற்று (ஜன.26) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!