India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
ரங்கநாதபுரம் பகுதியில் புத்தேரியில் மீன்கள் அனைத்தும் செத்து மிதக்கின்றன. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செத்த மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஏரியில் கழிவு கலப்பதை தடுக்க வேண்டும். ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு அடிகளார் கலை அறிவியல் கல்லூரியில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (அக்.26) நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி செல்வம், எம்எல்ஏ பனையூர் பாபு, கலெக்டர் அருண்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை வழங்கினர்.
மேல்மருவத்தூர் தனியார் மண்டபத்தில் பெரும் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 15,000 காலியிடங்களுக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் எம் எல் ஏ.பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில், நாளை 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து இன்று (அக்.26) இரவு 11.35க்கு புறப்படவுள்ள (02121) ஜபல்பூர் சிறப்பு ரயில், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் – அரக்கோணம் – பெரம்பூர் – கொருக்குப்பேட்டை தடத்தில் செல்லும். இந்த ரயில் நாளை (அக்.27) தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக இயங்காது. மதுரையில் இருந்து (அக்.27), 00.55க்கு கிளம்பும் சம்பர்க் கிரந்தி துரித ரயில், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் – அரக்கோணம் வழியாக செல்லும்.
கானாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பானு (52). இவருக்கு, நேற்று இரவு ஒரு தொலைபேசியில் இருந்து உங்கள் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகத் தெரிவித்து இணைப்பை துண்டித்துவிட்டார். பதறிய பாத்திமா தாம்பரம் காவல் கட்டுப்பட்டறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சோதனை செய்தபோது புரளி என தெரிந்தது. பின்னர் விசாரணையில் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் போன் செய்து மிரட்டல் விடுத்தது தெரிந்தது.
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்புடைய, 1.24 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் தங்க பசை பார்சலை, விமான நிலைய கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு விமானத்தில் இலங்கைக்கு செல்ல முயன்ற, இலங்கையைச் சேர்ந்த டிரான்சிட் பயணியை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஆத்தூர் அடுத்த தென்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் போனிஸ் நந்தா (26). இவர், நேற்று முன்தினம் அமணம்பாக்கம் சுடுகாட்டில், கஞ்சா விற்பனை செய்து வருவதாக, தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், போனிஸ் நந்தாவை பிடிக்க முயன்றபோது, தப்ப முயன்ற அவருக்கு இடறி கீழே விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டது. போனிஸ் நந்தாவை மீட்ட போலீசார், பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்யூர் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு பவுஞ்சூரில் இருந்து புதுப்பட்டு நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். இரணியசித்தி ஏரிக்கரை அருகே சென்றபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததால் ஜெயபால் பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.