Chengalpattu

News February 18, 2026

செங்கல்பட்டு: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

செங்கல்பட்டு காவல்துறையினரின் எச்சரிக்கை அறிவிப்பு

image

மக்கள் கவனத்திற்கு உதவி எண்கள் மோசடி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கும் உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யான உதவி எண்களாகும். மேலும், பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. போலியான உதவி எண்களை அழைத்து ஏமாற வேண்டாம். என செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News February 18, 2026

செங்கல்பட்டு: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன்<> இங்கே கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

செங்கல்பட்டு மக்களே பண மோசடியா? click!

image

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, செங்கல்பட்டு EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக பணம் திரும்ப கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

செங்கல்பட்டில் 250 கோழிகள் இலவசம்!

image

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

தாம்பரம்: புதுமணப்பெண் எடுத்த விபரித முடிவு!

image

தாம்பரம் அடுத்த இரும்புலியூர், முல்லை அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் மருத்துவராக உள்ளார். இவர் அபிநயா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் அருண்குமார் சந்தேகம் அடைந்ததால் அபிநயா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணை நடைபெற்று வருகிறது.

News February 18, 2026

செங்கல்பட்டில் EB பில் எகிறுதா..?

image

செங்கல்பட்டு மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு <<>>கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

செங்கல்பட்டு: காவலர் குடியிருப்பு வளாகத்தில் திடீர் தீ விபத்து

image

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான விபத்துக்குள்ளான வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 கார்கள் தீயில் கருகின. இந்த தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயினை அணைத்தனர்.

News February 18, 2026

செங்கல்பட்டு: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பகுதியில் (பிப்ரவரி 21) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற இந்த முகாம் பயனுள்ளதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 18, 2026

செங்கல்பட்டு: கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்

image

செய்யூர் அடுத்த கடுகுப்பட்டை சேர்ந்தவர் அங்கமுத்து (45), நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கடுகுப்பட்டு கிராமத்திற்கு திரும்பும் போது, எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில், அங்கமுத்து தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!