India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண் பொறியாளர்கள் (சிவில்) உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 2 வருடங்கள் அனுபவம் கொண்ட 30 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் பிப்.10ஆம் தேதிக்குள் chennaimetrorail.org என்ற இணையதளத்தில் <
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து 357 சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி, செய்யாறு அருகே சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏரியில் மிதந்து வந்த கேஸ் சிலிண்டர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தீவிரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ஜக்ரியா. கலீஃபா என்ற தீவிரவாத அமைப்பின் இந்திய நாட்டு தலைவராக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விமானம் மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற அவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
ECR சாலையில் பெண்களின் காரை துரத்தி சென்ற புகாரில், “2 கார்களில் வந்த நபர்கள் எங்களை துரத்தி வந்து வழிமறித்து, எங்கள் காரை ஏன் இடித்து விட்டு சென்றீர்கள்? எங்கள் காரை நீங்கள் இடித்து விட்டு காரை நிறுத்தாமல் சென்றதால் உங்களை துரத்தி வந்து பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என வந்ததாக அந்த மர்ம கும்பல் தெரிவித்தனர். ஆனால் நாங்கள் அதுபோன்று காரை இடிக்கவில்லை” என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை துரத்தி சென்று தாக்க முற்பட்டதாக எழுந்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீடியோ அடிப்படையில் கார் எண்கள் கண்டறியப்பட்டு இளைஞர்களை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்புக்கப்பட்டுள்ளது. பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இளைஞர்களை தேடி வருகிறது.
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.23.5 கோடி மதிப்புடைய 23.48 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. விமான சுங்க அதிகாரிகள், ஒரு பெண் உள்பட கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுராந்தகம் ரயில்வே மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜமீன் எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவர் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாம்பாக்கம் பகுதியில் இருந்து மதுராந்தகம் நோக்கி ஜீவகுமார் என்பவர் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கூவத்தூர் அடுத்த மலையூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர், நேற்று முன்தினம் (ஜன.27) சொந்த பணி நிமித்தமாக தனது டூவீலரில் பரமேஸ்வரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் கல்பாக்கம் நோக்கி சென்றார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ராமசந்திரன் நேற்று (ஜன.28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் ஜன.31ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் இதில், கலந்துகொண்டு அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் நகல், குடும்ப அட்டை நகலுடன் தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறலம்.
செங்கல்பட்டில், முதல்வர் மருந்தகம் அமைக்க, விருப்பமுள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் மருந்தகம் அமைக்க, பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ள தொழில்முனைவோர், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
Sorry, no posts matched your criteria.