India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியராக இருந்த ஆர்.அனமிகா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளம்பாக்கம் – மகேந்திராசிட்டி இடையே சுமார் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் 18.4 கி.மீ., தூரத்திற்கு 6 வழி உயர்மட்ட சாலை அமைக்க நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஐயன்சேரி சந்திப்பு, சிங்கபெருமாள் கோவில் மற்றும் காட்டாங்குளத்தூர் ஆகிய பகுதிகளில் நுழைவு பாதை மற்றும் வெளியேறும் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. இதனால் நேரிசல் குறையும்.
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேரனின் திருமணம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று (ஜன.31) நடக்கிறது. இதில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க இருப்பதால், போக்குவரத்தில் (மதியம் 4 முதல் இரவு 11 வரை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ECR-இல் இருந்து வரும் வாகனங்கள் கோவளம் சந்திப்பில் திரும்பி கேளம்பாக்கம் வழியாக செல்ல வேண்டும்.
செங்கல்பட்டு அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியில் உள்ள வீட்டில், நள்ளிரவில் ஏசி வெடித்ததில் பேராசியர் தனலஷ்மி (44) என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டில் வரும் பிப்.,12இல் முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், 30,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வாய்மொழி உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியில் ஈடுபட்டுள்ள வருவாய் துறை பணியாளர்கள், பல்வேறு நெருக்கடிக்கு ஆளாவதாக புலம்புகின்றனர். அவர்கள் வருவாய் ஆவணங்களை தயாரிப்பதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளதாகவும், பணிச்சுமை ஏற்படுவதாகவும் கூறினர்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். பிப்.3ஆம் தேதிக்கு மேல் விண்ணப்பிக்கலாம். <
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்ட சிற்பத் தொகுப்புகள் உள்ளது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த அந்தரத்தில் நிற்கக்கூடிய ஒரு மிகப்பெரிய கல், உருண்டை வடிவில் உள்ளதால் ‘கிருஷ்ணர் வெண்ணெய் உருண்டை கல்’ என பெயர் பெற்றது. இந்தக் கல்லை முதலாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன் நகர்த்த முயன்று தோற்றுப் போனார். அன்றிலிருந்து இன்று வரை சாய்ந்த நிலையிலேயே உள்ளது.
முட்டுக்காட்டில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், காரில் கொடி பொருத்திய நபர் திமுக பிரமுகர் இல்லை எனவும், மோசடி வழக்குகளில் தொடர்புடைய சந்துரு காரில் திமுக கொடியுடன் வலம் வந்துள்ளார் எனவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு சென்ற ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரி பாஜக எம்.பி செல்வகணபதியை நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக நேற்று ஆஜரான செல்வகணபதியிடம் சிபிசிஐடி போலீசார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சென்னை – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கருங்குழி – பூஞ்சேரி இடையே 32 கி.மீ-க்கு புதிய சாலை அமைக்க ரூ.80 லட்சத்தில் சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் சிரமமின்றி செல்லவும், மீண்டும் திரும்பவும் ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Sorry, no posts matched your criteria.